Maharashtra: மகாராஷ்டிரா மாநிலத்தில் கசாபா சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் மகாவிகாஸ் அகாதி கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ரவிந்திர தாங்கேகர் வெற்றி பெற்றுள்ளார்.
Maharashtra:மகாராஷ்டிரா மாநிலத்தில் கசாபா சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் மகாவிகாஸ் அகாதி கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ரவிந்திர தாங்கேகர் வெற்றி பெற்றுள்ளார்.
கசாபா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹேமந்த் ரசானே எதிர்த்துப் போட்டியி்ட்டு ரவிந்திர தாங்கேகர் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் கூறுகையில் “ இந்த வெற்றி என்பது, 3 கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டால், இடங்கள் முறையாகப் பகிரப்பட்டால், மகாவிகாஸ் அகாதி எதிர்காலத் தேர்தலில் பெறும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது
திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி! திப்ரா மோத்தா கட்சிக்கு வலைவீசும் பாஜக
மகாவிகாஸ் அகாதியில் உள்ள 3 கட்சிகளும் உற்சாகத்துடன் பணியாற்றினார்கள். ஆளும் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஒவ்வொரு அம்சத்தையும் பயன்படுத்தி, ரவிந்திர தாங்கேகரை தோற்கடிக்க முயன்றார்கள். ஆனால், மிகப்பெரியவெற்றி மகாவிகாஸ் அகாதிக்கு கிடைத்துள்ளது. பாஜக கடந்த 28 ஆண்டுகளாக வலுவாக இருக்கும் இடத்தில் வென்றிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்
நவநிர்மான் சேனா கட்சியில் இருந்த ரவிந்திர தாங்கேகர் கடந்த 2017ம் ஆண்டுகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கசாபா தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த முக்தா திலக் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த மாதம் 26ம் தேதி கசாபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றியபின் கொந்தளிப்பான சூழல் நிலவியது.
நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக2 பெண் எம்எல்ஏக்கள் | யார் இந்த குர்ஸே, ஜக்காலு?
கசாபா தொகுதியை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பினர் கடுமையாக பிரச்சாரம் செய்து வெற்றியைப் பெற்றுள்ளனர்.
ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, தான் கைவசம் வைத்திருந்த கசாபா தொகுதியை இடைத் தேர்தலில் இழந்தது அந்தக் கட்சிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது