காங்கிரஸ் கட்சித் தலைவர்களை மத்திய அரசு தீவிரவாதிகள் போல் நடத்துகிறது. கட்சி தலைமை அலுவலகம், கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி இல்லத்தை சுற்றி வளைத்து செயல்படவிடாமல் அரசு முற்றுகையிட்டுள்ளதுஎன்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களை மத்திய அரசு தீவிரவாதிகள் போல் நடத்துகிறது. கட்சி தலைமை அலுவலகம், கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி இல்லத்தை சுற்றி வளைத்து செயல்படவிடாமல் அரசு முற்றுகையிட்டுள்ளதுஎன்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்த எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்தனர்.
அடுத்த தலைமை நீதிபதி இவர்தானா! வரலாற்று சிறப்பு தீர்ப்புகளை வழங்கியவர்
அசோசியேட் ஜர்னலுக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கப்பரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்நிலையில் நேற்று நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பெரும் பதற்றமடைந்தனர். சோனியா காந்தி இல்லம், காங்கிரஸ் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் போலீஸார் தடுப்புகளை வைத்தனர், போலீஸார் குவிக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோல் செய்ததாகக் கூறி சிறிது நேரத்தில் போலீஸார் அங்கிருந்து புறப்பட்டனர். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்திருந்த ராகுல் காந்தியும், உடனடியாக தனது பயணத்தைக் முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அஜெய் மக்கான், அபிஷேக் சிங்வி ஆகியோர் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது அபிஷேக் சிங்வி கூறுகையில் “ மத்திய அரசு இதுபோன்று மலிவான, அற்பத்தனமான அரசியல் மீது எங்களை மிரட்ட முடியாது, இதற்கு காங்கிரஸ் கட்சி பயப்படாது. தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை நாங்கள் எழுப்புவோம்.
அச்சமுள்ள நரேந்திர மோடி அரசின் இந்த முற்றுகை மனநிலையின் நோக்கமே அவமானப்படுத்துவதுதான். ஒரு மட்டத்தில் திசைதிருப்புதலும், மறுபட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.
மத்திய அரசு ஒருவிதமான முற்றுகை மனநிலையை, அச்சமூட்டும் சூழலை உருவாக்கியுள்ளார்கள். புலனாய்வு, விசாரணை அமைப்புகளை இந்தியாவின் பழையான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்தியஅரசு எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அரசின் செயல்பாட்டையும் ஒட்டுமொத்த தேசமும், மக்களும் பார்த்து வருகிறார்கள்.
இந்த காங்கிரஸ் கட்சியையும், நிறுவனத்தையும், கட்சித் தலைவர்களையும் மத்திய அரசு தீவிரவாதிகள் போல் நடத்துகிறது. அற்பத்தனமான அரசியலின் மோசமான வடிவம். ஆனால் நீங்கள் எங்களைக் குறை கூறுகிறீர்கள். சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு இல்லங்களுக்கு அருகேயும், கட்சி அலுவலகத்துக்கு அருகேயும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த திறந்த விசாரணையப் போல் இருக்கிறது.
இந்த சூழலை இந்தியா மட்டுமல்ல உலகம்முழுவதும் பார்த்து வருகிறது. இதன் நோக்கம் நாங்கள் நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதற்கான மிரட்டலாக இருக்கிறது.
எந்த சூழல் வந்தாலும் நாங்கள் இந்த மிரட்டலுக்கு பணியமாட்டோம், எங்கள் பொறுப்புகளையும் விடமாட்டோம், பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம். இதுபோன்ற செயல்பாடுகள் விரக்தி அடைந்த அரசியலின் அடையாளம் என நம்புகிறோம். சமநிலையை இழந்த ஒர் அரசின் விரக்தி மனநிலை. நீங்கள் விரும்பு அளவுக்கு எங்களை அடக்க முயற்சிக்கலாம். ஆனால், எங்கள் எதிர்வினை ஜனநாயகரீதியில் இருக்கும். தொடர்ந்து உங்களை வெளிப்படுத்துவோம். ”
இவ்வாறு சிங்வி தெரிவித்தார்.
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில் “ காங்கிரஸ் கட்சி அலுவலகம், சோனியா காந்தி இல்லம் ஆகியவற்றுக்கு அருகே போலீஸார் குவிக்கப்பட்டிருப்பது என்பது அறிவிக்கப்படாத அவசரநிலையைப் போல் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் “ நாங்கள் மத்திய அரசுக்கு சொல்லவிரும்புவது என்னவென்றால், எங்களை அடக்க முயற்சிக்கலாம், ஆனால், காங்கிரஸ் கட்சி வளைந்து கொடுக்காது. தொடர்ந்து விலைவாசி உயர்வு,ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் குறித்து விமர்சிப்போம். இது பழிவாங்கும் அரசியல். இதுபோன்று கடந்த காலங்களில் நடந்தது இல்லை. முதல்முறையாக இதுபோன்று பார்க்கிறோம். இது வினாஷ் கால் விபரீதபுத்தி என்பார்கள்” எனத் தெரிவித்தார்