50 சீட் போச்சு.! 2019 மேஜிக் 2024ல் நடக்காது, ஆனால்.? காங்கிரஸ் எம்பி சசி தரூர் கிளப்பிய சர்ச்சை

By Raghupati RFirst Published Jan 14, 2023, 3:28 PM IST
Highlights

2024ல் பாஜக பெரும்பான்மையை இழப்பது உறுதி என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.

கேரள இலக்கிய விழாவில் பேசிய காங்கிரஸ் எம்.பி  சசி தரூர், 2019 ஆம் ஆண்டு பாஜக எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்று பார்த்தால், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவர்களுக்கு எல்லா இடங்களும் கிடைத்துள்ளன.

பீகார், ம.பி (மத்தியப் பிரதேசம்), மகாராஷ்டிராவில் ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்தும் என்று கூறினார். இப்போது, அந்த முடிவுகள் மீண்டும் நடக்கும் என்பதில் சாத்தியமில்லை. நாட்டில் தற்போது பாஜக ஆதிக்கம் செலுத்தினாலும், பல மாநிலங்களில் அக்கட்சி தனது பிடியை இழக்க நேரிடும்.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

இதே நிலை நீடித்தால், மத்தியில் ஆட்சியை இழந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல் நடந்தது. இது தேர்தலுக்கு கடைசி நிமிடத்தில் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது. 2024 தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும், ஆனால் 50 இடங்களை இழக்கும்.என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இருக்குமா என்ற கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக 303 இடங்களையும், காங்கிரஸ் 52 இடங்களையும் கைப்பற்றியது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி தொடர்ந்து பேசிய சசி தரூர், ஜனநாயகத்தில் பரம்பரை என்பது ஒரு சவால் தான்.

இருப்பினும், தனது கட்சியைப் பற்றி தனித்து பேசுபவர்களும் நாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று கூறினார். ஆசியாவின் மிகப் பெரிய இலக்கியச் சந்திப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த கேரள இலக்கியத் திருவிழா, நோபல் பரிசு பெற்றவர்கள், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர்கள், மூத்த அரசியல்வாதிகள் முதல் வரலாற்றாசிரியர்கள், திரைப்படப் பிரமுகர்கள் போன்றவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

இதையும் படிங்க..நாட்டு நாட்டு பாட்டுக்கு இவங்க ஆடியிருக்காங்களா.? ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா - வைரல் வீடியோ!

இதையும் படிங்க..சேது சமுத்திர திட்டத்தால் எந்த பயனும் இல்லை.. யாருக்கு பயன் தெரியுமா? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

click me!