டாக்டர் அம்பேத்கரை அவமானப்படுத்துகிறது காங்கிரஸ்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு

By Raghupati R  |  First Published Dec 18, 2024, 1:44 PM IST

பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்ததாக காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் அமித் ஷாவின் அறிக்கையைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்த நிலையில், மோடியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.


புதன்கிழமை, காங்கிரஸ் கட்சி பி.ஆர். அம்பேத்கரை அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த அறிக்கையால் சர்ச்சை எழுந்ததை அடுத்து மோடி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

If the Congress and its rotten ecosystem think their malicious lies can hide their misdeeds of several years, especially their insult towards Dr. Ambedkar, they are gravely mistaken!

The people of India have seen time and again how one Party, led by one dynasty, has indulged in…

— Narendra Modi (@narendramodi)

Tap to resize

Latest Videos

undefined

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் இல் பதிவிட்டதாவது, "காங்கிரசும் அதன் சீரழிந்த அமைப்பும், தங்கள் பொய்கள் பல ஆண்டுகளாக செய்து வரும் தீய செயல்களை, குறிப்பாக டாக்டர் அம்பேத்கருக்கு இழைத்த அவமானத்தை மறைக்கும் என்று நினைத்தால், அவர்கள் மிகவும் தவறாக நினைக்கிறார்கள். இந்திய மக்கள், ஒரு குடும்பத்தின் தலைமையிலான ஒரு கட்சி, அம்பேத்கரின் மரபை அழிக்க எப்படி எல்லா மோசமான தந்திரங்களையும் பயன்படுத்தியது என்பதை பலமுறை பார்த்திருக்கிறார்கள். எஸ்சி/எஸ்டி சமூகங்களை அவமதித்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

PF பணம் எப்போது? எப்படி எடுக்க முடியும்? புதிய ரூல்ஸ் இதுதான்!

click me!