'மைனாரிட்டி பாஜக'; ஆவேசமாக பேசிய டி.ஆர்.பாலு; ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ மசோதாவுக்கு எதிர்ப்பு!

By Rayar r  |  First Published Dec 17, 2024, 2:12 PM IST

மத்திய அரசு தாக்கல் செய்த ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ மசோதாவுக்கு மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைக்​கும், மாநிலங்​கள் மற்றும் யூனியன் பிரதேசங்​களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்​தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ திட்​டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது. இந்த திட்டத்தின் சாத்​தி​யக்​கூறுகள் குறித்து ஆராய்வதற்காக முன்​னாள் குடியரசுத் தலைவர் ராம்​நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்தது மத்திய அரசு. 

பின்பு இந்த குழு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிடம் கருத்துகள் கேட்டு அறிக்கை ச‌மர்ப்பித்தை தொடர்ந்து ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் பேசி வருகின்றனர். அந்த வகையில் திமுக பொருளாளரும், திமுக மக்களவை குழுத்தலைவருமான டி. ஆர். பாலு எம்.பி நாடாளுமன்ற மக்களவையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ மசோதாவுக்கு எதிராக பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ''தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதுபோல ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சிக்கு எதிரானது. ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இம்மசோதாவை நான் ஆதரிக்க முடியாது. ஒன்றிய பாஜக அரசிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த மசோதாவை எப்படி சட்டமாக்க முடியும்? 

தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஆட்சி செய்வதற்காகவே வாக்காளர்கள் ஒரு அரசை தேர்தெடுக்கிறார்கள். அது வாக்காளர்களின் அடிப்படை உரிமை. ஒரே தேர்தல் முறை மூலமாக அவ்வுரிமையை இந்த மசோதா பறிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் தேர்தல் நடத்த ஒவ்வொரு முறையும் 13981 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும், மேலும் 9284 கோடி ரூபாய் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க மட்டுமே செலவு செய்ய வேண்டும். இது தேவையில்லாதது. 

நாடு முழுவதும் அனைத்து கட்சிகளின் கருத்து ஒற்றுமையுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நடைமுறை சாத்தியமில்லை என 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழுவின் 79வது அறிக்கை முடிவு செய்திருக்கிறது என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். மேலும் ஒன்றிய அரசு நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இந்த மசோதாவை முதலில் விவாதித்துவிட்டு மீண்டும் அவையில் விவாதத்திற்கு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

click me!