பிரதமர் மோடியின் மத வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும். நமது வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளது என காங்கிரஸ் கூறி வருகிறது. அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கு நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் பகிர்ந்தளிக்கும் என்றார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், நாட்டின் செல்வத்தை தாய்மார்கள், சகோதரிகளிடம் இருந்து கணக்கிட்டு அது பற்றிய தகவல்களைப் பெற்று, அந்தச் சொத்தைப் பங்கிடுவோம் என கூறப்பட்டுள்ளது. நாட்டின் சொத்துக்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை என்று மன்மோகன் சிங் அரசு கூறியது. அப்படியானால் அந்த செல்வத்தை யாருக்கு பங்களிப்பார்கள்.?” என கேள்வி எழுப்பினார்.
“இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று கூறியது. இதன் பொருள் இந்த சொத்து யாருக்கு பங்கிடப்படும்? அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தங்கம் மற்றும் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பறித்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பகிர்ந்தளிப்பர். இதுதான் அவர்களது தேர்தல் அறிக்கையில் உள்ளது.” எனவும் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சைக் காங்கிரஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் எந்த இடத்திலும் அதுபோல சொல்லவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த மத வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
पहले चरण के मतदान में निराशा हाथ लगने के बाद नरेंद्र मोदी के झूठ का स्तर इतना गिर गया है कि घबरा कर वह अब जनता को मुद्दों से भटकाना चाहते हैं।
कांग्रेस के ‘क्रांतिकारी मेनिफेस्टो’ को मिल रहे अपार समर्थन के रुझान आने शुरू हो गए हैं।
देश अब अपने मुद्दों पर वोट करेगा, अपने…
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. அச்சத்தின் காரணமாக, தற்போது அவர் பொதுமக்களின் கவனத்தை பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப விரும்புகிறார். காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு நாடு முழுவதும் அபரிமிதமாக ஆதரவுகள் வரத் தொடங்கியுள்ளன. நாடு இப்போது அதன் பிரச்சினைகளில் வாக்களிக்கும், அதன் வேலைவாய்ப்பு, அதன் குடும்பம் மற்றும் அதன் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும். இந்தியா தவறான பாதையில் செல்லாது.” என தெரிவித்துள்ளார்.