வெப்பம் குறித்த செய்திகளை தொகுப்பாளர் படித்துக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
மேற்கு வங்கத்தில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், கொல்கத்தாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றது. தூர்தர்ஷன் தொகுப்பாளர் லோபாமுத்ரா சின்ஹா தொலைக்காட்சியில் நேரடியாக செய்திகளை வழங்கும்போது மயங்கி விழுந்தார்.
ஃபேஸ்புக்கில் இதுகுறித்து பதிவிட்ட அவர், “லோபாமுத்ரா சின்ஹா நிகழ்ச்சியின் போது தனது இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்தபோது சரிந்து விழுந்தார். நிகழ்ச்சிக்கு முன்பு தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இருப்பினும், ஒரு கிளாஸ் தண்ணீர் தனக்கு போதும் என்று நினைத்துக் கொண்டே செல்ல முயன்றேன்” என்று கூறினார்.
இச்சம்பவம் வெளியில் வந்ததில் இருந்து, மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர் விரைவில் குணமடையவும் வாழ்த்தினார்கள். மாநிலத்தின் பல பகுதிகளில் தற்போது 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் கடுமையான வெப்ப அலைகள் காணப்படுவதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..