உணவகங்களில் சர்வீஸ் சார்ஜுடன் ஜிஎஸ்டி வசூலித்தால் புகார் அளியுங்கள்... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

Published : Jul 04, 2022, 10:09 PM IST
உணவகங்களில் சர்வீஸ் சார்ஜுடன் ஜிஎஸ்டி வசூலித்தால் புகார் அளியுங்கள்... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

சுருக்கம்

உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்டவை நுகர்வோரிடம் இருந்து சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 

உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்டவை நுகர்வோரிடம் இருந்து சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எந்த ஒரு ஓட்டலும், அல்லது உணவகமும் நுகர்வோர்களை சேவை கட்டணம் செலுத்தும் படி கட்டாயப்படுத்த முடியாது.

இதையும் படிங்க: ஜாமர் கருவிகளை இவர்கள் பயன்படுத்த கூடாது... எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!!

சேவை கட்டணம் என்பது தன்னார்வமானது. அவை தனிப்பட்ட விருப்பமானதும் கூட. சேவை கட்டணம் அளிப்பது நுகர்வோரின் விருப்பப்படி என்பதை ஓட்டல்கள் உணவகங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். மேலும் உணவுக் கட்டணத்துடன் சேர்த்து மொத்த தொகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதன் மூலம் சேவை கட்டணத்தை வசூலிக்க முடியாது.

இதையும் படிங்க: இது தான் சார் இந்தியா ... பாகிஸ்தான் ராணுவத்திற்கு மனிதநேயத்தை போதித்த BSF

சேவைக் கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் கருதினால் அதை பில் தொகையில் இருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரலாம். 1915 என்ற எண்ணை அழைத்தோ அல்லது என்சிஎச் என்ற மொபைல் செயலி மூலமாக நுகர்வோர் ஹெல்ப்லைன் மற்றம் நுகர்வோர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம் என தெரியவந்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!