ஏத்தின விலையை இறக்க முடியுமா? வரிய அரசு குறைச்சாலும் இவனுங்க ஆட்டம் தாங்கல..!

 
Published : Nov 16, 2017, 02:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஏத்தின விலையை இறக்க முடியுமா? வரிய அரசு குறைச்சாலும் இவனுங்க ஆட்டம் தாங்கல..!

சுருக்கம்

companies wont reduced their bills even though gst reduced

அரசு ஜிஎஸ்டி வரியை 18 % த்தில் இருந்து  5 % ஆகக் குறைத்தாலும் அதே விலையைத்தான் பில்களில் போட்டு வில்லத்தனம் செய்கின்றன என்று புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, உணவகங்களில் இந்த கோல்மால் நடப்பதாக வெளிப்படையாக பலரும் புகார் கூறுகின்றனர். 

ஜிஎஸ்டி., கவுன்ச்ல் கூடிய பின்ன்னர் நவ.15 ஆம் தேதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொருட்களின் ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்பட்டது. இருப்பினும், பல நிறுவனங்கள் விலையை குறைக்க மறுத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. 

அண்மையில் கவுஹாத்தியில் நடந்த ஜிஎஸ்டி., கவுன்சில் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை மாற்றி அமைக்கப்பட்டது. குறிப்பாக, பலரது வேண்டுகோள்களை ஏற்று, உணவகங்களுக்கான ஜிஎஸ்டி., விகிதத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 18 சதவீதமாக இருந்ததில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், இந்திய தேசிய உணவகங்கள் சங்க(NRAI) உறுப்பினர்கள் சிலர், உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜிஎஸ்டி.,யின் உள்ளீட்டு வரி சலுகையால், உணவுப் பொருட்களின் விலை 6 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறினர். இருபினும்  மற்ற சங்கங்கள் அரசின் வரிக்குக்றைப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.  மேலும், இந்த வரிக் குறைப்பானது,  நுகர்வோர்க்கு மட்டுமின்றி, உணவக உரிமையாளர்களுக்கும் பயன் அளிக்கும் என்று கூறினர். 

இந்நிலையில் இந்திய தேசிய உணவகங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திததைத் தொடர்ந்து, அரசின் முடிவை ஏற்பதாகவும், ஜிஎஸ்டி. வரிக்குறைப்பை வரவேற்பதாகவும் கூறினார்.

இருந்த போதும், உணவகங்களில் பெருமளவு எண்ணிக்கையில், வரிக்குறைப்பை அமல்படுத்த வில்லை. உணவு பொருள்களின் விலையை ஏற்றி வைத்து, குறைவான வரியை அதில் சேர்த்து முறகேடுகளில் ஈடுபடுகின்றனர். 

அதுபோல், நுகர்பொருள்கள் கடைகளில் விற்பனையாகும் ஷாம்பு, சோப்பு போன்ற அன்றாடப் பயன்பாட்டு பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பிரபலமான நிறுவனங்கள் பல, பழைய சரக்குகள் விற்றுத் தீரும் வரை புதிய விலையை அமல்படுத்த முடியாது எனக் கூறியுள்ளன. எனவே, மக்கள் அதிக விலை கொடுத்தே பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில், ஜிஎஸ்டி வரி கூடியபோது எப்படி பில்களைப் போட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களோ, அதுபோல், இப்போது பில்களைப் போட்டு, நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அரசு வரியைக் குறைத்தாலும், விலையை நிறுவனங்கள் குறக்கவில்லை. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!