நடிகை அமலாபாலுக்கு தொடரும் பிரச்சனை! குற்றபிரிவு போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல்!

 
Published : Nov 16, 2017, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
நடிகை அமலாபாலுக்கு தொடரும் பிரச்சனை! குற்றபிரிவு போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல்!

சுருக்கம்

The Criminal Police have reported that the actress is investigating Amalapal!

காருக்கு வரி செலுத்த மறுத்த நடிகை அமலாபால் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரியில் வரி குறைவு என்பதற்காக கேரளாவில் வாகனத்தை பதிவு செய்யாமல், புதுச்சேரியில் வாகனத்தை பதிவு செய்ததால் கேரளா அரசுக்கு கிடைக்க வேண்டிய வரித்தொகை கிடைக்காமல் போனதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, நடிகை அமலாபால், சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.\

நடிகை அமலா பாலைத் தொடர்ந்து மலையாள நடிகர் பகத் பாசிலும், போலி முகவரி கொடுத்து சட்டத்தை மீறியதாக செய்திகள் வெளியானது. பகத் பாசிலைத் தொடர்ந்து நடிகர் சுரேஷ் கோபி மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

கேரளாவில் காருக்கு வரி செலுத்த மறுத்த நடிகை அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விரைவில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்க உள்ளனர். 

காருக்கு வரி ஏய்ப்பு தொடர்பாக பகத் பாசில், வரி செலுத்த சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார். நடிகர் சுரேஷ்கோபி, தனது காரை புதுச்சேரியில் பதிவு செய்தது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக போக்குவரத்து துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், நடிகை அமலாபால் வரி செலுத்த மறுத்த நிலையில் மீண்டும் பிரச்சனை கிளம்பியுள்ளது.

போலி ஆவணம் கொடுத்து வரி ஏய்ப்பு செய்த புகாரில் அவர் மீது வழக்கு பதவு செய்து நடவடிக்கை எடுக்க கொச்சி குற்றப்பிரிவு ஐஜி. ஸ்ரீ ஜித்து, கேரள போக்குவரத்து ஆணையர் அனில் காந்த்துக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரிக்கு கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் நடிகை அமலாபாலிடம் குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!