Protest : மக்களே உஷார்.! ஜூன் 27 நாடு முழுவதும் போராட்டம்.. காங்கிரஸ் அறிவிப்பு !

Published : Jun 22, 2022, 06:04 PM IST
Protest : மக்களே உஷார்.! ஜூன் 27 நாடு முழுவதும் போராட்டம்.. காங்கிரஸ் அறிவிப்பு !

சுருக்கம்

Agnipath :அதிகப்படியான கலவரங்கள் பீகாரில் நடந்து வருகிறது. ஜூன் 17 அன்று 3 ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்து வருகிறது.

மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்த அக்னிபத் திட்டத்தை எதிர்த்து, நாட்டின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதிகரித்து வரும் பரபரப்பான சூழலால் பீகாரில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.  ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப்  பரப்பி பொதுமக்களை தூண்டிவிட்டு உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் இணையம் பயன்படுத்தப்படுவதாக மாநில அரசு கூறியது.

அதிகப்படியான கலவரங்கள் பீகாரில் நடந்து வருகிறது. ஜூன் 17 அன்று 3 ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்து வருகிறது.அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் வட மாநிலங்களில் தீவிரமாகக் காணப்படுகிறது.

இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஜூன் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

ஏற்கனவே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். சில மாநிலங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 27ஆம் தேதி பாரத் பந்திற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : EPS Vs OPS : 23 தீர்மானம் ஓகே.. ஒற்றை தலைமைக்கு வாய்ப்பில்ல ராஜா! இபிஎஸ் - ஓபிஎஸ் காரசார விவாதம் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!
என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்களுக்கு இரவு விருந்து கொடுக்கும் பிரதமர் மோடி!