இந்தியாவில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி அதிகரிப்பு!

By Manikanda Prabu  |  First Published Jan 22, 2024, 5:47 PM IST

நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 10.13 சதவீதம் அதிகரித்துள்ளது


நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 2023ஆம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 10.13 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த மின் உற்பத்தி இதே காலகட்டத்தில் 6.71 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 872 பில்லியன் யூனிட்டுகளை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 813.9 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான நிலக்கரி விநியோகம் மேற்கொள்ளப்படுவதை இது எடுத்துக்காட்டுகிறது.

Tap to resize

Latest Videos

மின் தேவை அதிகரித்த போதிலும், நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 28.78 மில்லியன் டன்னிலிருந்த இறக்குமதி  2023 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் 17.08 மில்லியன் டன்னாகக் குறைந்தது. நிலக்கரி உற்பத்தியில் தற்சார்புக்கான நாட்டின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது.

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை: சரியாக 12.30 மணிக்கு பிறந்த குழந்தை!

இந்தியாவில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மக்கள் தொகை வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் இந்தியாவில் தற்போது மின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!