முதலமைச்சர் மீது தலைமைச்செயலகத்தில் வைத்தே மிளகாய் பொடி வீசிய மர்ம நபர்!

Published : Nov 20, 2018, 04:46 PM IST
முதலமைச்சர் மீது தலைமைச்செயலகத்தில் வைத்தே மிளகாய் பொடி வீசிய மர்ம நபர்!

சுருக்கம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அலுவல வாசலிலேயே வைத்து மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடி வீசினார். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அலுவல வாசலிலேயே வைத்து மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடி வீசினார். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கம்போல் பணிகளை செய்வதற்காக இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது பார்வையாளர்கள் பகுதியில் கடந்து சென்ற போது திடீரென முதல்வர் மீது தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை முகத்தை நோக்கி வீசினார். 

இதனால் அவர் நிலைகுலைந்து போனார். கெஜ்ரிவாலின் மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. மிளகாய்ப்பொடி பட்டதால் முகத்திலும் எரிச்சல் ஏற்பட்டது. உடனே அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தலைமைச் செயலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!