இனி ஒளிந்திருந்துதான் சிகரெட் பிடிக்கணும்... பொது இடத்தில் புகை பிடித்தால் கடும் தண்டனை...முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

By vinoth kumarFirst Published Nov 20, 2018, 10:21 AM IST
Highlights

கர்நாடகா மாநிலம் முழுவதும் புகைப்பிடிக்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அம்மாநில அமைச்சர் யு.டி.காதர் அறிவித்துள்ளார். 

கர்நாடகா மாநிலம் முழுவதும் புகைப்பிடிக்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அம்மாநில அமைச்சர் யு.டி.காதர் அறிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நகர மேம்பாட்டு துறை அமைச்சர் யு.டி.காதர், கர்நாடக மாநிலம் முழுவதும் பொது இடத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். 

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார். அதில் உள்ள அம்சங்களை மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதி, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஏற்கனவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது என்றார்.

click me!