மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ராஜா லோதி(20) என்ற இளைஞர் தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக பயிற்சி வகுப்புக்காக சென்று வந்தார். அப்போது ராஜா லோதி வகுப்பறையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மார்பை பிடித்துக்கொண்டு சரிந்தார்.
இந்தூரில் சிவில் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த ராஜா லோதி என்ற இளைஞர் வகுப்பறையில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ராஜா லோதி(20) என்ற இளைஞர் தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக பயிற்சி வகுப்புக்காக சென்று வந்தார். அப்போது ராஜா லோதி வகுப்பறையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மார்பை பிடித்துக்கொண்டு சரிந்தார்.
இதையும் படிங்க;- ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு.. இத்தனை வகையான வெயிட்டிங் லிஸ்ட் இருக்கா? நோட் பண்ணிக்கோங்க..
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் லோதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராஜா லோதிக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. வகுப்பறையில் இளைஞர் மயங்கி விழும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க;- பயிற்சி மையங்கள்.. இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்க முடியாது.. இன்னும் பல புதிய விதிகள் - அரசு அதிரடி!