அயோத்தி கோயிலின் கருவறையில் ராமர் சிலை நிறுவப்பட்டது.
அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 7 நாள் சடங்குகள் கடந்த 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நேற்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கருவறையில் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற மகிழ்ச்சியான முழக்கங்களுக்கு மத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டது.
மைசூரை சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய பல ராமர் சிலை வேத மந்திரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு மத்தியில் அயோத்தி கோவிலில் சேர்க்கப்பட்டது. 51 அங்குல உயரமும், 1.5 டன் எடையும் கொண்ட அயோத்தி ராமர் சிலை கருப்பு நிறத்தில் உள்ளது. தாமரை மீது ராமர் நிற்கும் புகைப்படத்தை பார்க்கும் பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
கர்நாடக சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய ராம் லல்லா சிலை ராமர் கோயிலில் நிறுவ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
"பிரபல சிற்பி அருண் யோகிராஜால் கிருஷ்ண ஷிலாவில் செதுக்கப்பட்ட மூர்த்தி, பகவான் ஸ்ரீ ராம்லல்லா சர்க்காரின் ஸ்ரீ விக்ரஹாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா X வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமரின் முகம் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது. கருவறையில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கு ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பூஜை செய்கிறார். அயோத்தி சன்னதியில் வேத முழக்கங்களுக்கு மத்தியில் சிலை பிரதிஷ்டை விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. சுமார் நான்கு மணி நேரம் 121 சிறப்பு பூஜை செய்து பலராமர் சிலையை நிறுவப்பட்டது. ஆனால் ஜனவரி 22ம் தேதி சிலை பிரதிஷ்டை முடிந்த உடன் ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கப்படும்.
அயோத்தியில் உள்ள பிரமாண்ட கோவிலில் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:30 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலையின் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த விழாவில் அரசியல்வாதிகள், திரையுலகப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த துறவிகள் என 7,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஜனவரி 23 முதல் அயோத்தி ராமர் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தர உள்ளார்..
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் விரதம் மேற்கொண்டு வருகிறார். தரையில் உறங்கி, இளநீர் மட்டும் அருந்தி பிரதமர் விரதம் மேற்கொண்டு வருகிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள ராமர் குறித்த தபால் தலை புத்தகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வெளியிட்டார், இவை வெறும் காகித துண்டுகள் அல்ல, வருங்கால சந்ததியினருக்கு வரலாற்று நிகழ்வுகளை எடுத்துச் செல்லும் ஊடகமாக செயல்படும் என்றும் கூறியிருந்தார்..