இந்தியாவுக்கு எதிராக நாறிப்போன கட்டுக்கதை..! சீனாவில் சூழ்ச்சியால் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..! அம்பலப்படுத்திய அமெரிக்கா..!

Published : Nov 22, 2025, 03:22 PM IST
Pakistan

சுருக்கம்

இந்தியா தனது உள்நாட்டு ஆயுத தளங்களை முதன்முதலில் ஆக்ரோஷமாகவும், தீர்க்கமாகவும் பெரிய அளவில் பயன்படுத்தியதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.

மே மாதம் நடைபெற்ற ஆபரேசன் சிந்தூரில் இந்தியாவுடனான நான்கு நாள் மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் பலமுறை கூறியுள்ளது. பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர், லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, அக்டோபரில் ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் சீன ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து சிலாகித்துப் பேசினார். ‘‘இந்தியாவுக்கு எதிரான மோதலில் சீனாவின் ஆயுதங்கள் அசாதாரண திறனை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு முழுமையாக தாக்கியது’’ என்று கூறினார். பாகிஸ்தான் இப்படி மீண்டும் மீண்டும் கூறி வந்தாலும், இந்தியாவிற்கு எதிராக சேதம் விளைவிப்பதைக் காட்டும் எந்த ஆதாரத்தையும் அதனால் முன்வைக்க முடியவில்லை. இதற்கிடையில், இப்போது வெளியிடப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் அறிக்கை, ‘‘இந்தியாவுடனான பாகிஸ்தானின் மோதலின் போது சீனா தனது ஆயுதங்களை சோதனை செய்து மட்டுமே பார்த்தது’’ என வெளிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களின் செயல்திறனை சீனா சோதித்து, மதிப்பீட்டிற்கான தரவுகளை சேகரித்ததாக அமெரிக்க காங்கிரஸ் அறிக்கை கூறுகிறது. பாகிஸ்தானின் பேச்சுக்கு மாறாக, சீனா தனது சொந்த ஆயுதங்களின் திறமைகளைப் பார்த்து கண்டு திகைத்துப் போயிருக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூரில் இருந்து வெளிவரும் உண்மைகள், சீனாவின் முதன்மையான வான் ஏவுகணையான பில்-15, ஹெச்க்யூ-9பி, வான் பாதுகாப்பு அமைப்பு, ஜெஹெச்-17, ஜெ-10 போர் விமானங்கள் போர்க்களத்தில் அவற்றின் செயல்திறனில் மோசமாகத் தோல்வியடைந்தன என்பதை வெளிப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதி வெற்றிபெற்றதாகக் கூறினாலும், உண்மை என்னவென்றால், இந்தியா லாகூரில் உள்ள ஹெச் க்யூ-9பி வான் பாதுகாப்பு அமைப்பின் ரேடாரை ட்ரோன் தாக்குதலில் அழித்தது. வான் பாதுகாப்புகளை அழித்தது. பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் 11 பாகிஸ்தான் விமான தளங்களில் துல்லியமான தாக்குதலால் சேதத்தை ஏற்படுத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் போது, ​​இந்தியா தனது உள்நாட்டு ஆயுதங்களின் சக்தியை நிரூபித்தது. சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பிரம்மோஸை தடுக்க மோசமாகத் தவறிவிட்டன. பாகிஸ்தான் ஆயுதங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தவுடன் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்தது. ஆனால் உண்மை என்னவென்றால், பாகிஸ்தான் சீனாவின் அடிமை நாடு. பாகிஸ்தான் தனது திட்டங்களுக்காக சீனாவிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை கடன் வாங்கியுள்ளது. பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் ஏழு இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது. அதே நேரத்தில் இந்தியா எந்த பாகிஸ்தான் ஜெட் விமானங்களையும் சுட்டு வீழ்த்தவில்லை’’ என்று கூறினார். உண்மை என்னவென்றால், பாகிஸ்தான் வெறுமனே பொய்யை மட்டுமே பரப்புகிறது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் இழப்புகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள இந்திய விமானப்படைத் தலைவர் ஏ.பி.சிங், ‘‘மே மாத மோதல்களின் போது இந்தியா 8 முதல் 10 பாகிஸ்தான் போர் விமானங்களை அழித்தது. அவற்றில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 விமானங்கள், சீனவி ஜேஎஃப்F-17 விமானங்கள் அடங்கும். இந்திய ஜெட் விமானங்கள் எதையும் பாகிஸ்தான் அழிக்கவில்லை. அவையெல்லாம் பாகிஸ்தானின் தேவதைக் கதைகள்’’ என்று கூறினார்.

இந்தியா தனது உள்நாட்டு ஆயுத தளங்களை முதன்முதலில் ஆக்ரோஷமாகவும், தீர்க்கமாகவும் பெரிய அளவில் பயன்படுத்தியதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது. இந்திய விமானப்படை, கூட்டுப் படைகள் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஆகாஷ் திர் வான் பாதுகாப்பு அமைப்பு, உள்நாட்டு மின்னணு போர் தொகுப்பு, பல அமைப்புகளை பயன்படுத்தியது.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சீனா இந்த மோதலை அதன் மேம்பட்ட ஆயுதங்களை நிஜ உலக கள சோதனையாகப் பயன்படுத்தியதாகவும் அமெரிக்க காங்கிரஸ் அறிக்கை கூறியுள்ளது. சீனா தனது ஹெஜ்க்யூQ-9P வான் பாதுகாப்பு அமைப்பு, பிஎல்-15 ஏவுகணை, ஜெ-10 போர் விமானங்களை உண்மையான போரில் பயன்படுத்தியது இதுவே முதல் முறை. இந்த மோதலை ஆயுதச் சந்தையில் தனது செல்வாக்கையும், நற்பெயரையும் விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக சீனா கருதியதாகவும், விரோதப் போக்கில் ஈடுபடாமல் மோதலில் அந்த ஆயுதங்களின் தரங்களை சோதித்து பார்த்து தரவுகளைப் பெற்றதாகவும் அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

ஜூன் 2025 க்குள் பாகிஸ்தானுக்கு 40 ஜெ-35 ஐந்தாம் தலைமுறை ஜெட் விமானங்கள், கெஜே-500 அமைப்புகள், புதிய பாலிஸ்டிக்-பாதுகாப்பு தளங்களை விற்கவும் சீனா முன்வந்துள்ளது. மே மாத மோதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீன வான் பாதுகாப்பு அமைப்புகள், பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்று சீனா குளோபல் டைம்ஸில் கூறியது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!