இருநாட்டுக்கிடையேயான ஒப்பந்தங்களை சீனா பின்பற்றுவதில்லை... இந்திய ராணுவ தளபதி குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Mar 29, 2023, 12:10 AM IST
Highlights

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை சீனா பின்பற்றுவதில்லை என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை சீனா பின்பற்றுவதில்லை என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக சீனா அன்மைகாலமாக எல்லையில் தங்களது ராணுவத்தை குவித்து வருவதோடு ஆயுதங்களை இறக்கி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லை பிரச்சனை குறித்து இரு நாட்டின் அதிகாரிகளும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தரமற்ற, போலியான மருந்துகளைத் தயாரித்த 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து!

ஆனால் தற்போது வரை தீர்வு கண்டபாடில்லை. இந்த நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை சீனா பின்பற்றுவதில்லை என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், சீனாவிடமிருந்து பல வகைகளில் ஆபத்துகள் வருகின்றன. சைபர் கிரைம் மூலம் பிற நாடுகளை உளவு பார்ப்பது போல், இந்தியாவையும் சீனா உளவு பார்க்க விரும்புகிறது.

இதையும் படிங்க: கொலை வழக்கில் ஜாமீன் வழங்கலாமா? முதல் முறையாக ChatGPT -ஐ கேட்டு தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்!

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் தனது ராணுவ பலத்தை சீனா அதிகரித்து வருகிறது. அருணாச்சலத்தின் தவாங்கில் அத்துமீறிய சீனாவின் நடவடிக்கைகளை முறியடித்தோம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருந்தாலும் கூட, அவற்றை சீனா  பின்பற்றுவதில்லை. இருந்தும் இந்திய ராணுவம் எந்த நிலையிலும் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

click me!