பாஜக மிரட்டலுக்கு அடிபணியப்போதில்லை.... மத்திய அரசுக்கு சவால் விடும் முதல்வர்கள்..!

By vinoth kumarFirst Published Jan 11, 2019, 1:03 PM IST
Highlights

ஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் முன் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என்றால் மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் சிபிஐ.க்கு அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் அறிவித்தார். இதேபோல் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சிபிஐ மாநில அரசின் அனுமதியின்றி சோதனை நடத்த தடை விதித்துள்ளார். 

இவர்களை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில அரசு இதே நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சத்தீஸ்கர் அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் புதிய விவகாரங்களில் சிபிஐ அதிகார வரம்பை சத்தீஸ்கர் மாநிலத்திற்குள் முன் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரநு அறிவுறுத்த வேண்டும். 

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2001-ம் ஆண்டு அளித்திருந்த ஒப்புதலை சத்தீஸ்கர் உள்துறை அமைச்சகம் திரும்பபெற்றுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலம் ஒன்றில் சிபிஐக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

click me!