
செல்லாத நோட்டுகள் விவகாரத்தில் அலைபாயும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆலாய் பறக்க அவர்கள் துன்பம் தெரியாமல் வங்கி ஊழியர்கள் அவர்களை ஏமாற்றுகின்றனர்.
பொதுமக்கள் ஏமாறாமல் இருக்கவே இந்த பதிவு. செல்லாத நோட்டுகளை முதல் நாள் வங்கியில் கொடுத்து மாற்ற பொதுமக்கள் சென்றனர். ஒரு நபருக்கு ரூ.2000 ஆயிரம் அடுத்து வரும் நாட்களில் 4000 வீதம் மாற்றி கொள்ளலாம் என்ற அறிவிப்பை வங்கி ஊழியர்கள் நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர்.
அப்பாவியாக வரும் பொதுமக்கள் வங்கி ஊழியர்களால் கேவலமாக நடத்தப்படுகின்றனர். பொதுமக்கள் வங்கிக்கு வரும்போது அவர்களிடம் முறையான தகவல் எதுவும் சொல்வதில்லை. கடைசி நேரத்தில் கவுண்டர் அருகில் வரும்போது ஏன் ஜெராக்ஸ் எடுத்து வரவில்லை என்று கேட்டு திருப்பி அனுப்புவது.
வரிசையில் நிற்பவர்களிடம் நீங்கள் இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்பது இல்லை என்றால் அந்த பேங்கில் தான் பணத்தை மாற்றணும் என்று திருப்பி அனுப்புவது. வாடிக்கையான விஷயமாக மாறி வருகிறது. மேலும் முதல் நாள் பணம் எடுத்தால் அடுத்த நாள் பணம் எடுக்க முடியாது என்று திருப்பி அனுப்புவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஆனால் நடைமுறை என்பது வங்கி அறிவிப்பு தெளிவாக உள்ளது. முதல் நாள் 2000 அடுத்த நாள் 4000 என மாற்றிகொள்ளலாம். தினம் ரூ 4000 மாற்றலாம். ஆனால் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இதற்கு மாற்றாக உள்ளனர். இதனால் பொதுமக்கள் இந்த விபரங்களை தெளிவாக தெரிந்து வங்கி ஊழியர்களுடன் பேசி அவ்வாறு தவறாக திசை திருப்பும் ஊழியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையையும் செய்ய வேண்டும்.
இது படிப்பறிவில்லாத மக்களை ஏமாற்றும் செயலாகும். கருப்பு பண முதலைகளுக்கு துணை போகும் விதமாக முதல்நாள் அடையாள அட்டை மற்றும் ஜெராக்ஸ்களை கொடுக்கும் சாதாரண அப்பாவிகளின் ஜெராக்ஸை பயன்படுத்தி தினம் தினம் பணத்தை மாற்றி அதை 15 % கமிஷனில் விற்கும் நடைமுறையும் உள்ளது.
பொதுமக்கள் இதை கலைந்து உண்மையான விபரங்களை படித்து அல்லது தொலைக்காட்சியில் பார்த்து தெளிவடைந்து வங்கிகளுக்கு செல்லுங்கள்.