BRICS மாநாட்டிற்கு பிறகு கிரீஸ் செல்லும் இந்திய பிரதமர்.. அடுத்த விசிட் ISROக்கு தான் - முழு விவரம்!

By Ansgar R  |  First Published Aug 24, 2023, 12:16 PM IST

நேற்று ஆகஸ்ட் 23ம் தேதி, இந்திய விண்வெளி துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு நாளாக மாறியுள்ளது. பல சிறந்த விஞ்ஞானிகளின் முயற்சியால் சந்திரயான் 3, நிலவின் தெற்கு பகுதியில் களமிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
 


இந்தியாவின் இந்த மகத்தான சாதனையை உலக நாடுகளில் உள்ள பெரிய தலைவர்கள் பாராட்டிவரும் நிலையில், தற்பொழுது தென் ஆப்பிரிக்காவிற்கு 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து ISRO குழுவிற்கு தனது பாராட்டுகளை தொலைபேசி மூலம் தெரிவித்தார். 

ISRO தலைவருடன் அவர் அலைபேசியில் உரையாடியது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் அவர் உடனடியாக நாடு திரும்பி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சி குறித்த சில அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Tap to resize

Latest Videos

ஆதார் அப்டேட்.. செப்டம்பர் 14 தான் கடைசி தேதி.. இதை செய்யவில்லை எனில் சிக்கல்..

பிரதமர் மோடி ISRO விசிட் 

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி அவர்கள் அதன் பிறகு நாளை ஆகஸ்ட் 25ம் தேதி கிரீஸ் நாட்டிற்கு செல்லவிருக்கிறார். கிரீஸ் நாட்டிற்கு சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளை அவர் முடித்த பிறகு, ஆகஸ்ட் 26ம் தேதி வரும் சனிக்கிழமை அதாவது நாளை மறுநாள், அவர் அங்கிருந்து புறப்பட்டு காலை 5 மணி 55 நிமிடங்களுக்கு பெங்களூரு விமான நிலையம் வந்தடைகிறார். 

அதன் பிறகு சுமார் 6.35 மணி அளவில் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேரடியாக அவர் சாலை வழியாக பெங்களூருவில் உள்ள ISTRACவிற்கு (ISRO Telemetry Tracking and Command Network) செல்கிறார். இங்கு நடக்கவிருக்கும் முக்கிய நிகழ்வில் அவர் பங்கேற்று, சுமார் ஒரு மணி நேரம் அங்கு நடக்கும் கலந்தாய்வில் உரையாற்றவுள்ளார். 

ISTRACல் நடைபெற இருக்கின்ற நிகழ்வில் பங்கேற்ற பிறகு, 8:00 மணிக்கு அவர் தனது பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து மீண்டும் பெங்களூரு விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். பிறகு அங்கிருந்து டெல்லி புறப்படவிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். பெங்களூருவில் விஞ்ஞானிகளை சந்திக்கவிருக்கும் பிரதமர் மோடி சந்திரயான் 3 திட்டம் மாபெரும் வெற்றியடைந்ததற்காக விஞ்ஞானிகளுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை தவிர வேறு யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்கின்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் உற்சாக நடனம்; வைரல் வீடியோ!!

click me!