சந்திரயான் 3 விண்ணில் பாயும்போது நேரில் பார்க்கணுமா? மிஸ் பண்ணாம இப்பவே அப்ளை பண்ணுங்க!

By SG Balan  |  First Published Jul 8, 2023, 10:48 AM IST

சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. நேரில் பார்க்க முடியாதவர்கள் யூடியூப் மூலம் லைவ் வீடியோவில் பார்க்கலாம்.


இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவின் மறுபக்கத்தை ஆராய்வதற்காக உருவகாக்கிய சந்திரயான்  3 செயற்கைக் கோள் வரும் ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணல் ஏவப்பட உள்ளது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இஸ்ரோ ஆயத்தப் பணிகளில் தீவிரமாக உள்ளது.

வெள்ளிக்கிழமை ராக்கெட் மின் சோதனைகளை முடித்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்-3 ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் நேரில் காண்பதற்கும் இஸ்ரோ வழிவகை செய்துள்ளது. இதற்கான பார்வையாளர் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மனீஷ் சிசோடியா சொத்துகள் முடக்கம்! டெல்லி மதுக்கொள்கை ஊழலில் அமலாக்கத்துறை நடவடிக்கை

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் உள்ள பார்வையாளர் கேலரியில் இருந்து, சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படுவதைப் பார்க்க பதிவுசெய்துகொள்ளுமாறு மக்களுக்கு இஸ்ரோ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  என்ற இணைய பக்கத்துக்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:

- ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / அரசு வழங்கிய அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று

- மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

- கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் அல்லது கோவிட்-19 நெகட்டிவ் சான்றிதழ்

ஆன்லைனில் பார்க்கலாம்:

நேரில் சென்று பார்க்க வசதி இல்லாதவர்கள் கண்டு களிக்க சந்திரயான்-3 விண்ணில் பாயும் காட்சி இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். https://www.youtube.com/@isroofficial5866 என்ற யூடியூப் பக்கத்தில் இஸ்ரோவில் நேரடி ஒளிபரப்பைக் காண முடியும்.

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்: கூச்பெகாரில் வாக்குச்சாவடியை சூறையாடி, வாக்குச்சீட்டுகளுக்கு தீ வைப்பு

click me!