சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்: ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவு!

By Manikanda Prabu  |  First Published Oct 31, 2023, 11:13 AM IST

சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு ஆந்திர முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபுவை ஆந்திர சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சந்திரபாபு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, ஃபைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஆந்திர அரசு பதிவு செய்தது. இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கியது.

Tap to resize

Latest Videos

விஜயநகர மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் 4 ரயில் விபத்துகள்: 67 பேர் பலியான சோகம்!

இந்த நிலையில், திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தன் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்ய மறுத்த ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல், ஃபைபர்நெட் முறைகேடு வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் மறுத்த ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மற்றொரு மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

click me!