சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தேர்தல் அதிகாரி!

By Manikanda Prabu  |  First Published Apr 5, 2024, 5:02 PM IST

சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு வழக்கில் தேர்தல் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்


சண்டிகர் மாநிலத்தில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரி அனில் மஸ்ஹி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில், வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி  திருத்துவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின்போது, வாக்குச்சீட்டுகள் திருத்தப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

Latest Videos

undefined

மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரை காலவரையின்றி தள்ளிவைத்தது. தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மஸ்ஹி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டது. அத்துடன், தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடு செய்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக தீர்ப்பளித்தது.

மதரஸா கல்வி வாரியச் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் தடை!

மேலும், சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு பாஜக வேட்பாளரை முறைகேடாக வெற்றி பெற்றார் என அறிவித்த தேர்தல் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யவும், தேர்தலில் முறைகேடு செய்ததற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்க கோரியும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு வழக்கில் தேர்தல் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். சண்டிகர் மேயர் தேர்தலில் தனது நடத்தைக்காக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் நடத்திய அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். சண்டிகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான எட்டு வாக்குகளை சிதைத்து வேண்டுமென்றே செல்லாது என அறிவித்தவர் அந்த தேர்தல் நடத்திய அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

click me!