நவம்பர் மாதத்துக்கான வரிப் பங்கீட்டை மாநிலங்களுக்கு விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
மத்திய அரசு, வரி வருவாயை மாநிலங்களுக்கு பங்கிட்டு அளித்து வருகிறது. பல தவணைகளாக இது வழங்கப்படுகிறது. தற்போது, ஒரு நிதியாண்டில், மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதம், மாநிலங்களுக்கு 14 தவணைகளில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அந்த வகையில், நவம்பர் மாதத்துக்கான வரிப் பங்கீடு ரூ.72,961.21 கோடியை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “2023 நவம்பர் மாதத்திற்கான வரிப் பகிர்வு 72,961.21 கோடி ரூபாயை, நவம்பர் 10 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 7 ஆம் தேதி வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது,” என்று மத்திய நிதி அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு விடுவித்துள்ள மாநிலங்களுக்கான வரி பங்கீட்டின்படி, அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ.13,088 கோடியும், குறைந்தபட்சமாக கோவா மாநிலத்துக்கு ரூ.281.63 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்துக்கு ரூ.7,338 கோடியும், மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.5,727 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
சீமான் - விஜய் கூட்டணியா? வாய்ப்பில்ல ராஜா..!
தமிழ்நாட்டை பொறுத்தவரை வரி பங்கீடாக ரூ.2,976 கோடி விடுக்கப்பட்டுள்ளது. இது உத்தரப்பிரதேசத்தை காட்டிலும் மிகவும் குறைவாகும். வழக்கம்போல், தென்னிந்திய மாநிலங்களுக்கும், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கும் குறைவாகவே வரி பங்கீடு பகிரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மாநிலங்களுக்கான வரி பங்கீடு.
ஒன்றிய அரசு விடுவித்துள்ள தொகை;
5 தென்னிந்திய மாநிலங்களுக்கும் சேர்த்து 11,527.86 கோடி.
ஆனால்
உத்தரப்பிரதேசத்திற்கு மட்டும் 13,088.51 கோடி .
இந்த விகிதாச்சாரத்திற்கு விளக்கம் அளிக்குமா ஒன்றிய அரசு? pic.twitter.com/BKeDXUveJT
“ஒன்றிய அரசு விடுவித்துள்ள தொகை; 5 தென்னிந்திய மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.11,527.86 கோடி. ஆனால், உத்தரப்பிரதேசத்திற்கு மட்டும் 13,088.51 கோடி. இந்த விகிதாச்சாரத்திற்கு விளக்கம் அளிக்குமா ஒன்றிய அரசு?” என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.