NDTVக்கு விதிக்கப்பட்ட ஒருநாள் தடை நிறுத்திவைப்பு : பின் வாங்கிய மத்திய அரசு

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 12:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
NDTVக்கு விதிக்கப்பட்ட ஒருநாள் தடை நிறுத்திவைப்பு  : பின் வாங்கிய மத்திய அரசு

சுருக்கம்

என்டிடிவி இந்தியா சேனலின் ஒருநாள் ஒளி‌பரப்புக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த பதான்கோட் தாக்குதலை என்டிடிவி இந்தியா சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. அப்போது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை எ‌ன்டிடிவி இந்தியா வரம்புகளை மீறி வெளியிட்டதாக அரசு குற்றஞ்சாட்டியது. இது விதிமுறை மீறல் எனக்கூறி அந்த சேனலின் ஒளிபரப்புக்கு வரும் 9-ம் தேதி ஒருநாள் மட்டும் மத்திய அரசு தடை விதித்திருந்தது.

என்டிடிவி-க்கு விதிக்கப்பட்ட இந்த தடைக்கு, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் என்டிடிவி-யும் மனு தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசு விதித்திருந்த தடையை ‌ரத்து செய்யுமாறு குறிப்பிட்டிருந்தது. ஒளிபரப்பிற்கு தடை விதிக்கும் அரசின் முடிவு, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் என்டிடிவி நிர்வாகம் தனது மனுவில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், என்டிடிவி இந்தியா சேனலின் ஒருநாள் ஒளி‌பரப்புக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனை, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

LPG Crisis: 10 நாள்ல கேஸ் தீர்ந்துடுமா? போர் பதற்றத்தால் இந்தியாவில் அசாதாரண சூழல்..
பெற்றோர் எதிர்ப்பு.. போலீஸில் தஞ்சம்.. காதலனை கரம் பிடித்த கும்பமேளா வைரல் அழகி மோனலிசா!