​சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்....!!! கடந்து வந்த பாதை..!

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 12:34 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
​சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்....!!! கடந்து வந்த பாதை..!

சுருக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் கடந்துவந்த பாதை.

கடந்த 1,500 ஆண்டுகளுக்கு மேல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது. இவர்கள் பம்பை என்ற இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிடுவர்.

கடந்த 1991-ம் ஆண்டு, 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய கேரள உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது. 

2006-ம் ஆண்டு ஜோசியர் உன்னிகிருஷ்ண பனிக்கர், சபரிமலையில் நடத்திய 4 நாள் பூஜையில் பெண்கள் கோவிலுக்குள் நுழைந்தது தெரியவந்ததாக அவர் கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியது.

2007-ம் ஆண்டில் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதிக்கலாம் என அப்போதைய இடதுசாரி அரசு கூறியது. 

2010-ல் நடிகை ஜெயமாலா அளித்த பேட்டியில், 1989-ம் ஆண்டு சபரிமலை கோவிலுக்கு சென்றபோது ஐயப்பன் விக்ரகத்தை வணங்கியதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் தொடர்பான பொதுநலமனு விசாரணையின்போது, கேரள அரசு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரி மலை தலைமை தந்திரி, உள்ளிட்டோருக்கு, 2010 ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2011-ம் ஆண்டு டிசம்பரில் மத உணர்வுகளை மீறியதற்காக நடிகை ஜெயமாலா, ஜோசியர் உன்னிகிருஷ்ண பனிக்கருக்கு கேரள உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு உள்ள தடை நீடிக்கும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கருத்து தெரிவித்தது. அதே மாதத்தில் இது தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு தலையிடாது என அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க ஆட்சேபனை இல்லை என கேரள அரசு உச்ச நீதிமன்றமத்தில் தற்போது தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

LPG Crisis: 10 நாள்ல கேஸ் தீர்ந்துடுமா? போர் பதற்றத்தால் இந்தியாவில் அசாதாரண சூழல்..
பெற்றோர் எதிர்ப்பு.. போலீஸில் தஞ்சம்.. காதலனை கரம் பிடித்த கும்பமேளா வைரல் அழகி மோனலிசா!