
தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் மறைமுகக் கட்டணம், காரணமில்லாமல் வசூலிக்கப்படும் கட்டணம், நன்கொடை ஆகியவற்றை தடுக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக கட்டண விவரம், உயர்த்தப்பட்ட அளவு ஆகியவற்றின் புள்ளிவிவரங்களை சி.பி.எஸ்.இ. அமைப்பு கேட்டுள்ளது.
எச்சரிக்கை
கடந்த சில வாரங்களுக்கு முன் எச்சரித்து இருந்த சி.பி.எஸ்.இ. வாரியம், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்களை விற்பனை செய்யும் விற்பனை கூடமாக மாற்றக்கூடாது என்று தெரிவித்து இருந்த நிலையில் இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்குநேற்று டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
நியாயமானதாக
அனைத்து தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிடமும், காரணமில்லாமல், தேவையில்லாமல் மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டோம். பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் என்பது நியாயமானதாக, எந்த மறைமுக கட்டணமும் இல்லாமல், பெற்றோர்களை வேதனைப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
அறிக்கை
நாட்டில் உள்ள அனைத்து தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கடந்த சில ஆண்டுகால கட்டண விவரங்கள், உயர்த்தப்பட்ட கட்டண அளவு ஆகியவை குறித்து அறிக்கை கேட்டுள்ளோம்.
பல பள்ளிகள் அனுப்பிவிட்டன, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கட்டண விவரங்களை அனுப்பாக பள்ளிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்,
தண்டிக்கப்படுவார்கள்
அனுப்பாவிட்டால், தண்டிக்கப்படுவார்கள். இப்போது தனியார் பள்ளிகள் ரூ.250 முதல் ரூ.2.5 லட்சம் வரை தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன. நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு உதவிடும் தனியார் முதலீடுகளை கணக்கிட்டு வருகிறோம். ஆதலால், பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கட்டண விவரங்களை அனுப்பாத பள்ளிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்ைகஎடுப்படும் என்பது குறித்து அமைச்சர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.