
மின்சாரம் மற்றும் சுகாதாரத் துறையில் 26 ஆயிரம் கோடி ஊழலா? கணக்கு தணிக்கை துறை அதிர்ச்சி தகவல்…
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி அவை முறையாக செலவழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து மத்திய கணக்கு தணிக்கை துறை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்த கணக்கு தணிக்கை துறை அளித்த அடிப்படையில் தான் 2ஜி உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் வெளியே தெரிய வந்தன.
இந்நிலையில் கடந்த ஆண்டில் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 11 ஆயிரத்து 824 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதற்கான கணக்குகள் முறையாக கணக்கிடப்படவில்லை என்றும் இதனை . சுகாதாரத்துறை அதிகாரிகள் சரியாக கண்காணிக்கவில்லை என்றும் கணக்கு தணிக்கை துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் மின்சாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 11 ஆயிரத்து 788 கோடியே 80 லட்சம் ரூபாய் பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அவற்றுக்கு முறையான கணக்குகள் பராமரிக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளது.
இந்த இரு துறைகளிலும் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பயனாளிகள் பட்டியல் முறையாக இல்லை என்றும் பணம் செலவழிக்கப்பட்டதற்கான ஆவணங்களில் தொடர்புடைய துறை அதிகாரிகளின் கையெழுத்து காணப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ள கணக்கு தணிக்கை துறை இதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.