"ஏற்கனவே பணம் கிடைக்காம அவதி.. இப்ப இதுவேறயா...?" 28ம் தேதி வங்கி ஊழியர்கள் சங்கம் ஸ்டிரைக்

Asianet News Tamil  
Published : Dec 21, 2016, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
"ஏற்கனவே பணம் கிடைக்காம அவதி.. இப்ப இதுவேறயா...?" 28ம் தேதி வங்கி ஊழியர்கள் சங்கம் ஸ்டிரைக்

சுருக்கம்

வங்கிகளுக்கு தேவையான பணம் அளிக்காத ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசை கண்டித்து  வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 28ம் தேதி ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அப்போது, முதல் வங்கிகள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றன. 

வாடிக்கையாளர்களுக்கு தேவையான பணத்தை ரிசர்வ் வங்கி கொடுக்காததால் வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள் முடங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், தினமும் பல்வேறு கெடுபிடிகளையும் ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள்

சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதாகதெரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அனைத்திந்திய மாணவர்  பெருமன்றம் சார்பில் சென்னையில் இன்று ரிசர்வ்

வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. இதே போன்று மதுரை திருமங்கலம் அருகே பணம் தர மறுத்த பேங்க் ஆப் இந்தியா வங்கியை நூறுநாள் வேலை திட்டஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு - என்ன நடக்கிறது கேரளாவில்? முழு விவரம்
Wayanad Landslide : நொடிப்பொழுதில் சரிந்த மலை...4 பேர் பலி! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!