"தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி" - முரளிதர ராவ் பேட்டி

Asianet News Tamil  
Published : Oct 12, 2016, 12:01 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
"தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி" - முரளிதர ராவ் பேட்டி

சுருக்கம்

காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமரோ, மத்திய அரசோ தன்னிச்சையாக அமைக்க முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் மற்றும் தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்த பிறகே,, மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். இரு மாநில தொடர்பான பிரச்சனையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. பாஜக பிரமுகர்கள் கொலை விஷயத்தில்  தொடர்புடையவர்கள் மீது மேண்மையான அணுகு முறையை தமிழக அரசு பின்பற்றுகிறது.

முதலமைச்சர் உடல்நிலையை கருதி துணை முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என பாஜக தெரிவிக்காது. தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு பாஜக வலியுறுத்தாது. இந்த விஷயத்தில் சுப்பிரமணியசாமி கூறியது அவரது சொந்த கருத்து என்றார்.

PREV
click me!

Recommended Stories

காங்கிரசில் 7 கோடிக்கு சீட் விற்பனை? ராகுல், பிரியங்கா மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!
இந்தியாவில் காமெனி பெயர் கொண்ட சாலை எங்கே இருக்கு தெரியுமா? வரலாறு முக்கியம் அமைச்சரே