
தபால் துறையில் போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்ட் பணிகளுக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த பல மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து விசாரயை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் பிகாரில் நடைபெற்ற முறைகேடுகளைப் போல் இந்திய தபால் துறை நடத்திய பணியாளர் தேர்விலும் நடந்திருக்கலாம் எனவும் மாணவர்கள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.
தபால் துறையில் போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்ட் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது.
அதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் 20க்கும் மேல் மதிப்பெண் எடுத்திருந்தனர். அது மட்டுமல்லாமல் ஹரியானா மாணவர்கள் தினேஷ் மற்றும் ராகுல் ஆகியோர் தமிழில் முதல் மதிப்பெண்கள் எடுத்திருந்ததனர்.
ஆனால் அவர்களை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த மோசடி குறித்து மதுரையைச் சேர்ந்த 40 மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் எளித்தனர்.
தபால் துறை தேர்வில் தமிழ் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது என்றும் தமிழ் நன்கு தெரிந்த, பள்ளியில் தமிழ்ப் பாடம் பயின்ற எங்களுக்கே சற்று கடினமாக இருந்தபோது ஹரியானா மாணவர்கள் எப்படி அதிக மதிப்பெண் பெற்றிருக்க முடியும் என்று அந்த மாணவர்கள் கேள்வி எழுப்பினார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஏற்கனவே பிட் அடிப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் இந்த பீகார் மாநில மாணவர்கள் பிட் அடித்திருப்பார்களா? அல்லது அதிகாரிகள் இந்த முறைகேடுகளுக்கு துணை போயிருப்பார்களா என கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு வேலை வாய்ப்பு பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது தபால் துறை தேர்வும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.