விஜய் மல்லையாவின் கடன்களை விரைவில் வசூலிப்பார்களாம்… பாஜகவினர் சொல்கிறார்கள்…

Asianet News Tamil  
Published : Mar 18, 2017, 06:55 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
விஜய் மல்லையாவின் கடன்களை விரைவில் வசூலிப்பார்களாம்… பாஜகவினர் சொல்கிறார்கள்…

சுருக்கம்

Vijay mallaia action

விஜய் மல்லையாவின் கடன்களை விரைவில் வசூலிப்பார்களாம்… பாஜகவினர் சொல்கிறார்கள்…

விஜய் மல்லையா வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை வசூல் செய்ய  பா.ஜ.க., அரசு தீவிரம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்களவையில் உறுதியளித்தார்.

பொதுத்துறை வங்களிடம் இருந்து கடன் பெற்று, திரும்ப செலுத்தாதவர்கள் குறித்த கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்களவையில்  பதில் அளித்தார்.

அப்போது: நாட்டின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில், பெரிய தொகையை கடனாகப் பெற்று, 9,130 பேர் அதை திரும்ப செலுத்தாமல் உள்ளனர் என தெரிவித்தார்.

அவ்வாறு கடன் பெற்றவர்களிடம் இருந்தது  91 ஆயிரத்து, 155 கோடி ரூபாய். கடன் தொகையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி  தலைமையிலான ஆட்சியின் போது, விஜய் மல்லையா 8,040 கோடி ரூபாய் பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து கடனாகப் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் தற்போது, லண்டனில் தலைமறைவாக உள்ளார் என்று தெரிவித்த அமைச்சர் அந்த  கடனை திரும்பப் பெற, காங்கிரஸ்  அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

ஆனால் விஜய் மல்லையா  வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை வசூல் செய்யும் பணியில், பா.ஜ., அரசு தீவிரம் காட்டி வருகிறது என அமைச்சர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!