பிரதமர் மோடி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு - அமைச்சர்களிடம் ‘ப்ராகிரஸ் ரிப்போர்ட்’ கேட்கிறது மத்திய அரசு

First Published Apr 9, 2017, 5:29 PM IST
Highlights
central govt asking progress report from ministers


பிரதமர் மோடி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதையடுத்து, சாதனைகளை அனைத்தையும் அறிக்கையாக அளிக்க அனைத்து அமைச்சர்களுக்கும் மத்தியஅரசுஉத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக  துறைவாரியாக 5 முக்கிய சாதனைகள், அரசின் திட்டங்கள் மூலம் பயணடைந்த மக்கள் அளவு, பா.ஜனதா பதவி ஏற்றபின் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த புள்ளிவிவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அனைத்து துறை அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி, விரைவில் இந்த அறிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது-

1. அமைச்சகம் ரீதியாக 5 மிகப்பெரிய சாதனைகள். இந்த திட்டங்கள் மக்கள் பயணடைந்த விவரம், பாராட்டப்பட்ட திட்டங்கள்.

2. ஒவ்வொரு அமைச்சகத்தின் முக்கிய சாதனைகள்

3. ஒவ்வொரு அமைச்சகமும் கடந்த 2014 முதல் 2017 வரையிலான ஒப்பீட்டு புள்ளிவிவரங்கள். உதாரணமாக அதாவது 2014ம் ஆண்டு கொடுக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் இணைப்புகள், 2017ம் ஆண்டு வரை கொடுக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் போன்று புள்ளிவிவரங்கள்

4. அமைச்சகம் அளவில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள். புதிய கொள்கைகள், செயல்பாடு, திட்டங்கள்

5. வெற்றிகரமாக அமைந்த இரு திட்டங்கள் குறித்து ஒரு பத்தியில் அளிக்க வேண்டும். இவ்வாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மே 26-ந்தேதி மோடி பிரதமராகப் பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைகிறது.  அதற்கு முன்பாக, அமைச்சர்கள் அளிக்கும் புள்ளிவரங்களை தொகுத்து ஒரு புத்தமாக வெளியிட மத்தியஅரசுதிட்டமிட்டுள்ளது.

click me!