ராமர் கோயில் கட்டுவதை எதிர்பவர்களின் தலை வெட்டப்படும் - பாஜக எம்எல்ஏ மிரட்டல் பேச்சு

 
Published : Apr 09, 2017, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
ராமர் கோயில் கட்டுவதை எதிர்பவர்களின் தலை வெட்டப்படும் - பாஜக எம்எல்ஏ மிரட்டல் பேச்சு

சுருக்கம்

bjp mla says that those who oppose ramar temple will be killed

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவரை எதிர்பவர்களின் தலை துண்டிக்கப்படும் என்று ஐதராபாத் பாரதியஜனதா எம்.எல்.ஏ. ராஜா சிங் அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரி இடத்தில் ராமர் கோயில் கட்டும் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரும் நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. இவ்வாறு பேசியுள்ளார்.

சிறைசெல்ல தயார்

மத்திய அமைச்சர் உமாபாரதி நேற்ற முன்தினம் லக்னோ நகரில் அளித்த பேட்டியில், “ என்னைப் பொருத்தவரை ராமர் கோயில் என்பது, நம்பிக்கை சார்ந்த விஷயம். ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நான் சிறை செல்ல வேண்டும் என்றாலும், அல்லது நான் தூக்கில் தொங்க வேண்டும் என்றாலும் நான் தயார்’’ என்று பேசிய இருந்தார்.

எதிர்த்தால் வெட்டுவேன்

இந்நிலையில், ஐதராபாத்தின் கோஷாமலா தொகுதியைச் சேர்ந்த பாரதியஜனதா கட்சி எம்.எல். ஏ. ராஜா சிங் , ராமர் கோயிலை எதிர்ப்பவர்களின் தலையை வெட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், “ அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டால் நாங்கள் போராட்டம் , பிரச்சினை செய்வோம் என சிலர் கூறுகிறார்கள். அப்படி எங்களை எச்சரிப்பவர்களை நான் வரவேற்கிறேன். அதன் பின்விளைவுகளையும் அவர் சந்திக்க வேண்டும்.

இத்தனை நாட்களாக இதற்காகத் தான் காத்திருந்தேன், ராமர் கோயிலை எதிர்ப்பவர்களின் தலையை வெட்ட தயாராக இருக்கிறேன் ’’ என மிரட்டல் விடத்துள்ளார்.

இதேபோல...

இதேபோல கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நொய்டாவில் பசுவின் இறைச்சி வைத்திருந்ததாக முகமது அக்லாக் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

அப்போது கருத்து தெரிவித்த ராஜா சிங், “ என் சிந்தனையோடு ஒத்துப்போகும் இளைஞர்கள் தயாராக இருங்கள், பசுக்களை கொல்பவர்களை நாம் வெட்டிக் கொல்ல வேண்டும்.  தெலங்கானாவில் யாரானேும் பசுக்களை கொலை செய்தால், அவர்களின் தலை துண்டிக்கப்படும்’’ எனத் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!