அனைத்து மாநில எல்லைகளையும் மூடுங்கள்..! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

Published : Mar 30, 2020, 10:09 AM IST
அனைத்து மாநில எல்லைகளையும் மூடுங்கள்..! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

அனைத்து மாநில எல்லைகளையும் மூட மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. மக்கள் ஒரு மாநிலத்தில் மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் போது கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருப்பதன் காரணமாகவே மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த இரண்டு வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தற்போது வரையிலும் 1024 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் 27 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாதவாறு 144 தடை நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து மாநில எல்லைகளையும் மூட மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. மக்கள் ஒரு மாநிலத்தில் மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் போது கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருப்பதன் காரணமாகவே மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் தங்கி பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக சொந்த ஊர் செல்ல மாநில எல்லைகளில் திரண்டுள்ளனர். போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் பலர் நடந்தே தங்கள் ஊர்களுக்கு சென்று வருகின்றனர். டெல்லியில் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!