திகார் சிறையில் ரவுடி கொலையை வேடிக்கை பார்த்த தமிழ்நாடு போலீஸ்! அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சி!

By SG Balan  |  First Published May 6, 2023, 7:54 AM IST

டெல்லி திகார் சிறையில் பிரபல ரவுடி சுனில் தாஜ்பூரியா எதிர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி திகார் சிறையில் பிரபல ரவுடி சுனில் தாஜ்பூரியா எதிர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டபோது குறைந்தது 10 போலீசார் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தது அம்பலமாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ரவுடி சுனில் மான் என்ற தில்லு தாஜ்புரியா எதிரி கும்பலால் திகார் சிறையிலேயே கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தின்போது சிறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெள்ளிக்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

தாஜ்பூரியாவை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வந்து தரையில் கிடத்துவதையும் கொலையாளிகள் அவரை அதைத் தாக்கி கொல்வதையும் காணமுடிகிறது. தாஜ்புரியாவின் எதிரியான மற்றொரு ரவுடி ஜிதேந்தர் கோகியின் கூட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் துண்டா, தீபக் தீத்தர் இருவரும் தாஜ்புரியாவை தாக்கத் தொடங்குகிறார்கள். போலீசாரை அங்கிருந்து செல்லுமாறும் கூறுகின்றனர்.

திராவிட மாடல் தயவு இல்லாவிட்டால் நோட்டா கூட தாண்ட முடியாது! ஞாபகம் இருக்கட்டும்! வெகுண்டெழுந்த கி.வீரமணி.!

அங்கு நின்றிருந்த ஒரு காவலர் கூட தாஜ்பூரியாவைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. அந்த போலீசார் அனைவரும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திகார் சிறை நிர்வாகம் இதுவரை ஒரு உதவி கண்காணிப்பாளர் உட்பட ஒன்பது அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, தாஜ்புரியா சிறையின் தரைத் தளத்தில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது எதிரிகளான யோகேஷ், தீபக், ராஜேஷ், ரியாஸ் கான் ஆகியோர் முதல் தளத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இரவில் தங்கள் சிறைக்கம்பிகளை உடைத்துக்கொண்டு கீழே வந்து, தரைத்தளத்திற்கு வந்துள்ளனர். தாஜ்புனியா இருந்த அறையின் கம்பியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற அவரை காலால் உதைத்தும் இரும்புக் கம்பியால் அடித்தும் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. மண்டோலி சிறையில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தாஜ்பூரியா திகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். தாஜ்புனியாவைத் தாக்கிய குற்றவாளிகள் சிறையில் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டதாவும் தெரிகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விஏஓ கொலை செய்யப்பட்ட விவகாரம்... கைதான இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!!

click me!