பெரிய நாடுகள் முயற்சி கூட செய்யாததை இந்தியா செய்ததது... ஆபரேஷன் காவேரி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!!

Published : May 05, 2023, 10:25 PM IST
பெரிய நாடுகள் முயற்சி கூட செய்யாததை இந்தியா செய்ததது... ஆபரேஷன் காவேரி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!!

சுருக்கம்

சூடானில் சிக்கியுள்ள குடிமக்களைக் காப்பாற்ற பெரிய நாடுகள் கூட முயற்சி செய்யாதபோது இந்தியா அதனை செய்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

சூடானில் சிக்கியுள்ள குடிமக்களைக் காப்பாற்ற பெரிய நாடுகள் கூட முயற்சி செய்யாதபோது இந்தியா அதனை செய்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, பெரிய நாடுகள் கூட தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆனால் இந்திய அரசு அந்த முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தது. ஆபரேஷன் காவேரி நடத்தி மக்களை மீட்டு வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். சூடானில் இருந்து இதுவரை 3195 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வங்கி மோசடி வழக்கில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனர்... நிறுவனரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை!!

எட்டு நாட்களில் ஏராளமான மக்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் 2500க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பணியின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 50 மலையாளிகள் வீடு திரும்பியுள்ளனர். ஜெட்டாவைத் தவிர, தெற்கு சூடான், எகிப்து, சாட் மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகளுக்கும் மக்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பணியின் ஒரு பகுதியாக இலங்கை, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் குடிமக்களும் வெளியேற்றப்பட்டனர். ஐந்து ராணுவக் கப்பல்கள் மற்றும் 13 விமானப்படை விமானங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: https://tamil.asianetnews.com/life-style-fashion/indian-fashion-designer-priyanka-mallick-designs-king-charles-iii-queen-camilla-outfits-for-coronation-ceremony-ru6sk7

இது தற்காலிகமாக கார்டூமில் இருந்து போர்ட் சூடானுக்கு மாற்றப்பட்டது. கார்ட்டூமில் நிலைமையை கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சூடானில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட போதிலும் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே மோதல்கள் தொடர்கின்றன. மேலும் 72 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்தை மீறி ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை குற்றம் சாட்டியது. ஆனால், ஆர்எஸ்எஃப் பதுங்கியிருந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி
சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இல்லீகல் 'கிஃப்ட்'..! இந்தியாவிற்கு புண்ணாக மாறிய வஞ்சகம்..!