தனக்கு தானே சிதை தயாரித்து, தன்னை எரித்துக்கொண்ட 90 வயது முதியவர்.. அதிர்ச்சி சம்பவம்..

Published : May 05, 2023, 06:21 PM ISTUpdated : May 05, 2023, 06:22 PM IST
தனக்கு தானே சிதை தயாரித்து, தன்னை எரித்துக்கொண்ட 90 வயது முதியவர்.. அதிர்ச்சி சம்பவம்..

சுருக்கம்

தெலங்கானாவில் சொந்த ஊரை விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் 90 வயது முதியவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவைச் சேர்ந்த 90 வயது முதியவர் தனது சொந்த கிராமத்தை விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் தனக்கு தானே தீ வைத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். சித்திப்பேட்டை மாவட்டம் ஹுஸ்னாபாத் மண்டலத்தில் உள்ள பொட்லப்பள்ளி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேடபோயின வெங்கடையா என அடையாளம் காணப்பட்ட நபருக்கு கனகையா, உம்மையா, போச்சையா, ஆரையா என 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

அவரது 4 மகன்களில், இரண்டு மகன்கள் பொட்லப்பள்ளி கிராமத்திலும், ஒரு மகன் ஹுஸ்னாபாத்திலும், 4-வது  மகன் நவாப்பேட்டை கிராமத்திலும் வசிக்கின்றனர். வேங்கடய்யாவின் மனைவி வெகு காலத்திற்கு முன்பே காலமானார். வெங்கடையா தனது 4 ஏக்கர் விவசாய நிலத்தை நான்கு மகன்களுக்கும் பகிர்ந்தளித்தார். இவரது மகன்கள் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். வெங்கடையாவுக்கு மாதந்தோறும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

இதையும் படிங்க : ஜம்முவில் என்கவுண்ட்டர்.. 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்.. இண்டர்நெட் சேவை துண்டிப்பு..

இவர் தனது மூத்த மகன் கனகய்யாவுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். அவரது 4 மகன்களும், ஐந்து மாதங்களுக்கு முன், வெங்கடையாவை கவனித்துக்கொள்வது தொடர்பாக, கிராம தலைவர்களை அணுகினர்.

ஒவ்வொரு மகனும் சுழற்சி முறையில் வெங்கடையாவை ஒரு மாத காலம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கிராமத் தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி தனது மூத்த மகன் கனகய்யாவுடன் அவரது சொந்த கிராமத்தில் தங்குவதற்கான அவரது ஒரு மாத காலம் முடிந்துவிட்டது. அடுத்து அவர் நவாப்பேட்டை கிராமத்தில் உள்ள தனது இரண்டாவது மகனிடம் செல்ல வேண்டும். ஆனால் எப்போதும் சொந்த கிராமத்தில் தங்க விரும்பினார் மற்றும் நவாப்பேட்டை செல்ல மறுத்துவிட்டார்.

எனினும் மே 2ம் தேதி நவாப்பேட்டைக்கு செல்வதாக கூறி மூத்த மகனை விட்டு வெளியே வந்து பொட்லப்பள்ளியை சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவரின் வீட்டிற்கு சென்று இரவு தங்கினார். மறுநாள் நவாப்பேட்டை செல்வதாக பொதுமக்கள் பிரதிநிதியிடம் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனால் மாலை வரை அவர் மகனின் வீட்டிற்கு வரவில்லை. ஆனால், வியாழக்கிழமை மதியம் பொட்லப்பள்ளியில் உள்ள எல்லம்மகுட்டா என்ற இடத்தில் ஒரு முதியவரின் சடலம் பகுதி எரிந்த நிலையில் இருப்பதை கிராம மக்கள் கவனித்தனர்.

வெங்கடய்யாவின் சடலம் தந்தையின் சடலம் என அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். வெங்கடய்யா, காய்ந்த பனை ஓலைகளால் சொந்தமாக சிதை ஒன்றை தயாரித்து, தீ வைத்து எரித்து, தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக, கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : நீட் தேர்வு : பெங்களூருவில் பிரதமர் மோடியின் 2 நாள் ரோட்ஷோவில் மாற்றம்.. பாஜக அறிவிப்பு..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indigo : பயணிகளுக்கு ரூ 10,000 மதிப்புள்ள வவுச்சர்கள்..! அவமானத்தை ஈடுகட்டும் இண்டிகோ நிறுவனம்..!
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!