CBSE: இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்? அதனை பார்ப்பது எப்படி?

By Narendran S  |  First Published Jul 3, 2022, 10:14 AM IST

Central Board of Secondary Education of India: சிபிஎஸ்இ  10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சிபிஎஸ்இ  10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 2 பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் தேர்வு முடிகளை பார்த்துக்கொள்ளலாம். மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்குக் கிடைக்கும். சிபிஎஸ்இ வட்டார தகவல்களின் படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான மதிப்பீட்டு செயல்முறை முடிந்துவிட்டது என்றும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதலில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: கவனத்திற்கு!! ஆசிரியர் தகுதித் தேர்வு.. இந்தெந்த தேதிகளில் திருத்தம் மேற்கொள்ளலாம்.. அறிவிப்பு..

மேலும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கான தற்காலிக தேதியாக ஜூலை 4 (நாளை) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்த போதிலும் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களில் அவற்றைச் சரிபார்க்க முடியும். அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ-யின் புதிய போர்டலான parikshasangam.cbse.gov.in இலும் முடிவுகள் வெளியிடப்படும் என்று கருதப்படுகிறது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி? 

  • முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in அல்லது cbseresults.nic.in செல்லவும்
  • முகப்புப்பக்கத்தில், 10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ 2ம் பருவத் தேர்வுக்கான லிங்கை கிளிக் செய்யவும்
  • உங்கள் தேர்வுப் பட்டியல் எண், பள்ளிக் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும்
  • உங்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்
  • எதிர்கால குறிப்புகளுக்கு அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுடும் எடுத்துக்கொள்ளலாம். 

இதையும் படிங்க: நீட் தேர்வு அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி..? முழு விபரம்..

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிகளை எஸ்எம்எஸ் மூலம் பார்ப்பது எப்படி? 

  • உங்கள் மொபைலில் எஸ்எம்எஸ் பயன்பாட்டைத் திறக்கவும்
  • cbse10 < space > roll number என்பதை டைப் செய்யவும் 
  • பின்னர் அதனை 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும்
  • சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.
click me!