
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். மேலும், அவரை வெற்றி பெறச் செய்ய முயற்சி மேற்கொண்டு வரும் பாஜக, மறுபுறம் குடியரசு துணை தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ஐதராபாத் வந்த ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்றார் முதல்வர் சந்திரசேகரராவ்!
இதனிடையே, குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
”குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு கிராமத்துக்கு, இப்போ தான் மின்சார வசதி கிடைக்குது !”
தற்போதைய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் நிரந்தர அடையாளமாக விளங்கிய அமரீந்தர் சிங், அக்கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மோதலால், காங்கிரசிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.