சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு - மிசா பாரதி அமலாக்கத்துறையினர் முன்பு ஆஜர்..

Asianet News Tamil  
Published : Jul 11, 2017, 04:23 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு - மிசா பாரதி அமலாக்கத்துறையினர் முன்பு ஆஜர்..

சுருக்கம்

Case of illegal money laundering on misa bharathi

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் லாலுபிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜரானார்.

1991 முதல் 1993 வரை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் லாலு பிரச்சாத் யாதவ். மேலும் 2006 ல் ரயில்வேத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

லாலுபிரசாத் முதலமைச்சராக இருந்தபோது மாட்டுதீவனம் வாங்கியதில் ஊழலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டு சிறைக்கு சென்றார்.

பின்னர், ஜாமினில் வெளியே வந்த அவர் மீது பினாமி பெயரில் சொத்து சேர்த்ததாக குற்றசாட்டு எழுந்து புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து லாலுவுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி,பாட்னா, ராஞ்சி, புரி, குர்கான் உள்ளிட்ட 12 இடங்களில் தற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர், டெல்லியில் உள்ள அவரது மகள் மிசா பாரதியின் பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதையடுத்து அமலாக்கத்துறையினர் லாலுபிரசாத் மகள் மிசா பாரதிக்கு நோட்டீஸ் நோட்டிஸ் அனுப்பினர்.

அதில், மிசா பாரதி இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறும் நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை கொண்டு வருமாறும் தெரிவித்திருந்தது.

இதைதொடர்ந்து டெல்லி மேல்சபை எம்.பி.யான மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று ஆஜரானார்.

PREV
click me!

Recommended Stories

அஜித் பவாருக்குப் பிறகு NCP தலைவர் யார்..? மகாயுதி கூட்டணி தொடருமா..? மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..!
மகாராஷ்டிரா அரசியலை உலுக்கிய அஜித் பவாரின் டாப் 5 முடிவுகள்