வீட்டில் இருந்தபடியே “வருமான வரி ரிட்டன்” - வருமானவரித்துறை புதிய ஆப்ஸ் அறிமுகம்…

First Published Jul 11, 2017, 2:40 PM IST
Highlights
Arun Jaitley Launches Aaykar Setu An App To Pay Taxes Apply For PAN Card


வருமானவரி செலுத்துபவர்கள் வீட்டில் இருந்தபடியே, யாருடைய துணையும் இன்றி ரிட்டன் தாக்கல் செய்ய வசதியாக “ஆயக்கர் சேது” என்ற செயலியை(ஆப்ஸ்) வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இந்த செயலியை நேற்று முறைப்படி அறிமுகம் செய்துவைத்தார். இந்த “ ஆயக்கர் சேது” செயலி முதல்கட்டமாக ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் செயல்படுமாறு  உருவாக்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்துபவர்கள் இதில் தங்களி்ன் பான்கார்டு எண்் ஆதார் கார்டு எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும், 7306525252  என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் செய்து ஆப்ஸை பதிவிறக்கம் செய்யலாம்

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது “ மத்திய நேரடி வரிகள் வாரியம்  எடுத்துள்ள இந்த செயலி முயற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வருமானவரி செலுத்துபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வெளிநபர்களின் உதவி இல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே, வருமானவரி ரிட்டனை தாக்கல் செய்துவிட முடியும்.

வருமானவரி செலுத்துபவர்களும், அதிகாரிகளும் நேரடியாக சந்தித்து கொள்ளும் சூழலை குறைக்கும். இருவரும் சந்திக்கும் போதுதான் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை தவிர்க்கும். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வருமானவரித்துறையின் தோற்றத்தை மக்கள் மத்தியில் உயர்த்திக்காண்பிக்கும் ” எனத் தெரிவித்தார்.

வருமானவரி செலுத்துபவர்கள் வருமானவரி செலுத்தும் காலமாக இப்போது இருப்பதால், இந்த செயலி அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வரி செலுத்துதல், வரி ரீபண்ட் பெறுதல், குறைகளை தெரிவித்தல், பான்கார்டுக்கு விண்ணப்பித்தல் இந்த ஆப்ஸில் செய்ய முடியும்.

குறிப்பாக இந்த ஆப்ஸில் சாட்டிங் வசதி உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பான்கார்டு, டி.டி.எஸ், டி.ஏ.என்., ரிட்டன் பைலிங், ரீபண்ட் நிலை,வரி செலுத்திய விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும், வரி தொடர்பான வல்லுநர்கள் ஆகியோருடன் சாட்டிங் செய்து ஆலோசனைகள் பெறலாம், மேலும், அருகில் உள்ள வரி ரிட்டன் தயாரிப்பவர்களின் முகவரியையும் பெறலாம்.

மேலும் வருமான வரி செலுத்துபவர்கள் வரி செலுத்தும் தேதிகள், படிவங்கள், அறிவிக்கைகள் ஆகியவை குறித்து அவர்கள் ஐ.டி.டி. படிவத்தில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும், மேலும், எஸ்.எம்.எஸ். அலர்ட்டும் கொடுக்கப்படும்.

வருமானவரி செலுத்துபவர்கள் கூறிய புகார்களுக்கு எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள, துரிதமாக செயல்பட்டுவருவது குறித்த விவரங்களும் இந்த ஆப்ஸில் இருக்கும். 

click me!