மாட்டிறைச்சி விவகாரம் – உயர்நீதிமன்ற தடையை நீட்டித்தது உச்சநீதிமன்றம்…!!!

 
Published : Jul 11, 2017, 02:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
மாட்டிறைச்சி விவகாரம் – உயர்நீதிமன்ற தடையை நீட்டித்தது உச்சநீதிமன்றம்…!!!

சுருக்கம்

The Supreme Court has ordered the extension of the ban imposed by the Central Government to sell cows for meat

இறைச்சிக்காக மாடுகள் விற்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு தடை விதித்தது.

இதற்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், மத்திய அரசின் திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.  

இதை எதிர்த்து இறைச்சிக்காக மாடுகள் விற்க கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இறைச்சி மாடுகளை விற்பதற்கான தடையை தளர்த்துவது குறித்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மக்களின் கருத்துகள் கேட்டு, விரைவில் புதிய உத்தரவு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து  இறைச்சிக்காக மாடுகள் விற்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் கிளை விதித்த தடையை நீக்க மறுத்து இந்த வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!