கார்களில் ‘ஏர் பேக்’, ‘சீட் பெல்ட் அலர்ட்’ கட்டாயம்....மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

 
Published : Oct 30, 2017, 08:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
கார்களில் ‘ஏர் பேக்’, ‘சீட் பெல்ட் அலர்ட்’ கட்டாயம்....மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

சுருக்கம்

car seat belt and air pack must

கார்களில் ‘ஏர் பேக்’, ‘சீட் பெல்ட் அலர்ட்’ கட்டாயம்....மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

2019ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின் தாயாராகும் அனைத்து கார்களிலும் பயணிகள், ஓட்டுநரின் உயிர்காக்கும் ‘ஏர் பேக் பலூன்’, ‘சீட் பெல்ட் அணியக் கூறும் அலாரம்’, வேகக்கட்டுப்பாடு கருவி ஆகியவை பொருத்த வேண்டும் என்று கார் தயாரிப்பாளர்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “ நாட்டில் சாலையில் நடந்து செல்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் புதிய விதிமுறைகளை 2019ம் ஆண்டு முதல் கொண்டுவர உள்ளது.

அதன்படி, 2019ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின் தாயாராகும் அனைத்து கார்களிலும் பயணிகள், ஓட்டுநரின் உயிர்காக்கும் ‘ஏர் பேக் பலூன்’, ‘சீட் பெல்ட் அணியக் கூறும் அலாரம்’, வேகக்கட்டுப்பாடு கருவி ஆகியவை பொருத்த வேண்டும் கார்கள் 80கி.மீ வேகத்துக்கு அதிகமா செல்லும்போது காரில் ஒலிப்பான் எச்சரிக்கை செய்ய வேண்டும், 100கி.மீ வேகத்தை கடக்கும் போது, எச்சரிக்கை மிகவும் தீவிரமாகவும், 120 கி.மீ வேகத்தை தாண்டும் போது, எச்சரிக்கை ஒலி விடாமல் ஒலிக்க வேண்டும்.

இந்த புதிய விதிமுறைகளையும், வசதிகளையும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும்., மேலும், விபத்து நேரத்தில் காரின் ‘சென்ட்ரல் லாக்கிங்’ செயல் இழந்துவிடாமல் இருக்கும் வகையில் கட்டமைப்பு செய்ய வேண்டும். ஏனென்றால் விபத்து நேரத்தில் கதவுகள் திறக்கமுடியாமல் போய்விடுவதால், தப்பிக்க வழியின்றி பலர் உயிரிழக்க நேரிடுகிறது. அதைத் தடுக்க ‘சென்ட்ரல் லாக்கிங்’ முறையில் போலிகளை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கார்கள் பின்னோக்கி நகரும் போது, பின்னால் இருக்கும் பொருட்கள், கார்கள் தெரியும் வகையில் எச்சரிக்கை கருவியும், கேமிரா பொருத்த வேண்டும்.

இது போன்ற வசதிகள் எதிர்காலத்தில் இருக்கும்போது, விபத்தில் பெருவாரியாகக் குறைவாக வாய்ப்புண்டுஎனத் தெரிவிக்கின்றனர்.

18 முதல் 25 வயதுக்குட்பட்டோர் அதிகம்

மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த ஆண்டில் ஒரு மணிநேரத்துக்கு 55 சாலை விபத்துக்கள் நடந்து, அதில் 17 பேர் இறந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரத்து 652 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன, அதில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 785 பேர் உயிரழந்துள்ளனர், 4 லட்சத்து 94 ஆயிரத்து 624 பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர். 2016ம் ஆண்டு விபத்துக்கள் குறித்த புள்ளிவிவரப்படி விபத்துக்களில் 46 சதவீதம் பேர் இறக்கின்றனர். அதில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோர்தான் அதிகம் என்று தெரிவிக்கிறது.

 

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்