பீரில் ஓடும் கார் … இனி பெட்ரோல் – டீசல் தேவையில்லை !!!

Asianet News Tamil  
Published : Dec 08, 2017, 12:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
பீரில் ஓடும் கார் … இனி பெட்ரோல் – டீசல் தேவையில்லை !!!

சுருக்கம்

car run by Beer

கார்களுக்கு எரி பொருளாக பயன்படும் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக இனி பீர் உபயோகிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது.

கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து  வரவதால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் அவ்வப்போது கடடையாக உயர்ந்து வருகிறது. உற்பத்தி செலவு குறைவாக இருந்தாலும் கச்சா எண்ணெய் கிடைக்கும்  வளைகுடா நாடுகள் தங்களின் இஷ்டம் போல பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

இதனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக புதிய எரி பொருளை கண்டுபிடிக்கும் பணியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.

மதுவில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றினால் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் மதுவகைகளில் நிறைய சோதனைகள் நடத்தி பிரிக்கப்பட்டது. ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.

மேலும் மதுவகையில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்ற முடியவில்லை. அப்படி மாற்றினாலும் அது வாகனத்துக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, பீரில் இச்சோதனையை செய்தனர். அது வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது.

அதில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் வாகனத்தை சரியாக இயக்கியது. அதிக மைலேஜீம் கொடுத்தது. எனவே பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பீர் எரி பொருளாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒரேயொரு சிக்கல் உள்ளது என்றும் அதன்படி பீரில் இருக்கும் எத்தனாலை பியூட்டனாலாக மாற்றுவது மட்டும் கடினமாக உள்ளது. அதுவும் சரி செய்யப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இனி காரும் , மனிதர்களும் ஒரே இடத்தில் பீர் போடலாம் !!!

 

 

 

 

 

 

,

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!