கார் மீது லாரி மோதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

Published : May 11, 2019, 05:19 PM IST
கார் மீது லாரி மோதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

சுருக்கம்

மத்திய பிரதேசம் அருகே கார் மீது மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசம் அருகே கார் மீது மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மெகந்திபூர் பாலாஜி கோவிலுக்கு வேனில் சென்றுக்கொண்டிருந்தனர். ஆக்ரா-ஜான்சி சாலையில் குவாலியரை அடுத்த சுங்கச்சாவடியை அடைந்தபோது,  ஒரு லாரியின் பின்னால் வேன் நின்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி, வேன் மீது மோதியது. இதனால் இரண்டு லாரிகளுக்கு நடுவில் சிக்கிய வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

 

இதில் வேனுக்குள் இருந்த 2 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்