100 தோப்புக்கரணம் போட தயாரா..? பிரதமர் மோடிக்கு பகிரங்க சவால் விடுத்த மம்தா..!

By vinoth kumarFirst Published May 9, 2019, 6:03 PM IST
Highlights

எங்கள் மீதான நிலக்கரி புகார் நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போட தயாரா என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். 

எங்கள் மீதான நிலக்கரி புகார் நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போட தயாரா என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் நிறைய முறைகேடான நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகிறது. இதை வைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பலர் தவறான முறையில் பணம் சம்பாதித்து வருகின்றனர். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தி இருக்கும் 42 வேட்பாளர்களும் நிலக்கரி சுரங்க மாபியாக்கள்தான் என்றும், இந்த தேர்தலுக்கு பின் மேற்குவங்கத்தில் ஆட்சி கவிழ்ந்து திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைவார்கள் என்று மோடி கூறினார். 

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். திரிணாமுல் வேட்பாளர்கள் மீது மோடி ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். மோடி எங்கள் வேட்பாளர்கள் 42 பேரை குற்றவாளி என்று நிரூபித்தால் நான் அவர்கள் 42 பேரின் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் அப்படி நிரூபிக்கவில்லை என்றால் மோடி மேற்குவங்க மக்கள் முன்பு காதில் கை வைத்து 100 தோப்புக்கரணம் போட தயாரா? என முதல்வர் மம்தா பானர்ஜி சாவல் விடுத்துள்ளார். 

click me!