ராணுவத்தை அழையுங்கள்... எல்லாம் தோல்வி அடைந்தால் மட்டும்! ரயில்வே மற்றும் பொதுப்பணி வேலைக்கு அல்ல!

 
Published : Nov 04, 2017, 04:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
ராணுவத்தை அழையுங்கள்... எல்லாம் தோல்வி அடைந்தால் மட்டும்! ரயில்வே மற்றும் பொதுப்பணி வேலைக்கு அல்ல!

சுருக்கம்

Call in the Army when all else fails not to do the railways and PWD job

மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில், நடைபாதை நெரிசலில் சிக்கி, 23 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. விபத்து நடந்த இடத்தில் மிகப்பெரிய நிறுவனமான ரயில்வே துறையில் உள்ள ஊழியர்கள் புதிய நடைப்பாலம் அமைக்கும் பணியைச் செய்யாமல் நாட்டைக்காக்கும் கடமையில் உள்ள ராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிவ் சந்திரசேகர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.

ரயில்வே மற்றும் பொதுப்பணித்துறை தங்களது  வேலைகளைச் செய்யாமல் எப்போது தோல்வி அடைகிறதோ அப்போது இதுபோன்ற பணிகளுக்கு ராணுவத்தை அழையுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரயில்வே மற்றும் பொதுப்பணித்துறை தங்களது  வேலைகளைச் செய்யாமல் தோல்வி அடையும்போது இராணுவத்துக்கு அழைப்பு விடுங்கள் 

மும்பை, எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில், நடைபாதை நெரிசலில் சிக்கி, 23 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு புதிய நடைபாலம் அமைக்கும் பணிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைணை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் ரயில்வே என்பது நமது நாட்டின் மிகப்பெரிய நிறுவனம். கடந்த ஆண்டு வரை ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் போடப்பட்டு வந்தது. அதற்கென காலண்டரில் தனியாக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு வந்தது. பின்னர் அது பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவின் LifeLine அதாவது வாழ்க்கைக் கோடு என்று அழைக்கப்பட்டு வரும் ரயில்வே நிர்வாகம் தவறான அரசியல் வழிமுறைகளால் கடந்த சில ஆண்டுகளாக மோசமாக உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், பயணிகள் பாதுகாப்பு மற்றும் உயிர்களைப் பொறுத்தவரையில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள் மற்றும் குறைபாடுகள் நீண்டகாலமாக இந்திய இரயில்வே துறையை ஒரு குறைபாடுள்ள வரைமுறைக்குள் வைத்துள்ளன. 

ரயில்வே துறையின் அக்கறையின்மையால் ஏற்படும்  விளைவுகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தொடரும்  ரயில் விபத்துக்கள் மட்டுமல்லாமல் ,  எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய பாலம் சரிவு போன்ற பல துன்பகரமான சம்பவங்களிலும் பலர் உயிரிழந்துள்ளனர் என்பது பெரும் ஆச்சரியமல்ல. பெரும்பாலும் ஏழை மற்றும் குறைந்த நடுத்தர வர்க்கத்தினர் ரயிலில்  பயணித்து வருவதால், கட்டாயமாக ரயில்வேயின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புப் பதிவை சரிசெய்ய  வேண்டிய அவசியத்துக்கு முன்னுரிமையளிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தற்போது ரயில்வே தள்ளப்பட்டுள்ளது. 
 
இந்தச் சூழலில், மகாராஷ்டிர முதலமைச்சருடன் சேர்ந்து இரண்டு மத்திய அமைச்சர்கள் (பாதுகாப்பு மற்றும் இரயில்வே) இடம் பெற்ற ஒரு படத்தை நாம் அண்மையில் செய்தித்தாள்களில் பார்த்தோம். மும்பையில் சில நாட்களுக்கு முன்னர்  எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய  பாலம் சரிந்து விபத்துக்குள்ளானதால் சேதமடைந்த , 3 புதிய பாலங்களை ராணுவமே கட்டப் போவதாக முதலமைச்சர் பட்னவிஸ் அப்போது அறிவித்தார்.
இதில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றாலும், (இஸ்ரோவை நீங்கலாக) நாட்டில் எஞ்சியிருக்கும் தொழில்முறை, திறமையான அமைப்புக்களில் ஒன்றாக ஆயுதப் படைகள் திகழ்கின்றன.


 
போரின்போது ஆயுதப்படைகளின் பணி பிரதானமாக இருந்தாலும் மற்ற காலங்களில் பொது மக்களுக்கான சேவைகளை ஆயுதப்படைகளின் மூலம் பெற முடியும். வெள்ளம், பூகம்பங்கள் அல்லது கலகங்கள் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்கள் அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள் போன்ற சமயங்களில் ஆயுதப்படையினர் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மீண்டும் மீண்டும் செய்து வரும் சேவைகள் நாம் அனைவரும் அறிந்ததே. 
 
இப்படி பல அர்ப்பணிப்பு பணிகளை ராணுவத்தினர் செய்யும்போது , மும்பையில் கட்டடப் பணிகளை இராணுவத்திடம்  மேற்கொள்ளச் சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போர், பேரிடர் மீட்பு போன்ற சூழ்நிலைகளில் பணியாற்றுவதற்கு பயிற்சி பெற்ற ராணுவத்தினரை, ரயில்வே கட்டடங்கள் கட்டுவது போன்ற சிவில் சூழ்நிலைகளில் அடிக்கடி பயன்படுத்துவது  நல்லதல்ல.
 
கட்டடப் பணிகளுக்கு ஆயுதப் படைகளை பயன்படுத்துவது என்பது, இரு காரணங்களில் ஒன்றாகும். அதாவது அவசர காலங்களில் உள்நாட்டு வளங்களை பெருக்குவதற்கும்,  சிவில் நிர்வாகம் அதிகமாக அல்லது உடைந்து போகும் சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

தற்போது மும்பை  நகரின் கட்டுமானப் பணிகள்  இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதுவும்  பணக்கார மும்பை மாநகராட்சிக்கு.  பொதுப் பணித்துறைப் பணிகளைச் செய்ய மாநில அரசு வளமான ஆதாரங்களைக் கொண்டுள்ளது.  ஏற்கெனவே ரயில்வே துறையில்  1.3 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த துறைக்கென  தனியான திட்டங்கள் மற்றும் கட்டுமான திறன் போன்றவை உண்டு. 

இப்படி பொதுப் பணித்துறை , மும்பை மாநகராட்சி, ரயில்வே என்ற  இந்த மூன்று அமைப்புகளின் கீழ் இந்த கட்டடப் பணிகளைச் செய்யலாம். ஆனால் இராணுவத்தை இப்பணிகளில் ஈடுபடுத்துவதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லை.
 
நமது ரயில்வே அமைச்சர் ஆர்வத்துடனும், சுறுசுறுப்பாகவும், பிரச்சனைகளை அணுகி வருவது அவர் சிறந்த நிர்வாகி என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவருக்கு , அனைத்து  விவரங்களும் தெரியும் என்ற நிலை இருந்தாலும்,  பொதுப் பணித்துறை, மும்பை மாநகராட்சி, ரயில்வே போன்ற துறைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து  கட்டடப் பணிகளை வழங்காமல் ராணுவத்திடம் இதை ஒப்படைக்கும் யோசனையை  அவர் வழங்கியிருக்கக்கூடாது.
 
இப்பணிகளுக்காக இராணுவத்தை பயன்படுத்துவது என்பது, இந்த மூன்று நிறுவனங்களின் மீதான புரிந்துகொள்ள முடியாத திறனற்ற தன்மையின் ஒரு வெளிப்படையான கண்ணோட்டத்தைக் காட்டுகிறது. பொது உள்கட்டமைப்பில் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதில், குறிப்பாக நடை பாலங்கள்  போன்ற அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளில் இந்த மூன்று நிறுவனங்களும்  பொறுப்புடையதாக இருக்க வேண்டும்.
 
புகைமூட்டம் விலகிய நிலையில், எல்பின்ஸ்டன் ரோடு பால விவகாரத்தில், சம்பவம் நடந்த வுடனே, மும்பையில் ஒரு அவசரகால நிலை ஏற்பட்டது.  எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய பாலப் பணிகளில்  ரயில்வேயின் அதிகாரத்துவ அணுகுமுறை வழியே ஒப்பந்தம் செய்வதன் மூலம், இரயில்வே, பொதுப்பணித்துறை , அல்லது மும்பை மாநகராட்சி ஆகியவற்றிலிருந்து விரைவான தீர்வு வரப்போவதில்லை. எனவே, அரசாங்கத்தின் துறைகள் வேறு எதுவும் எந்தத் திறமையும் இல்லாதிருந்த நிலையில், திட்டங்களை விரைவாக  நடைமுறைப்படுத்தவும் நிறைவேற்றவுமான திறனுடன் இராணுவம்  வந்தது.
 
பொதுவாக இராணுவம் என்பது எப்போதும் இந்திய மக்களுக்கு கடைசி மற்றும் மிகவும் நம்பகமான துறையாக இருந்து வருகிறது. ஆனால் மும்பையில் ரயில்வே நடைபாலங்களைக்  கட்டுவதற்காக ஆயுதப்படைகள் அழைக்கப் பட்டிருப்பதால்  மற்ற துறைகள் எல்லாம்  தோல்வி அடைந்தால், உடனே ஆயுதப் படைகளை அழைக்க வேண்டும் என்று மும்பை வாசிகள் நம்பத் தொடங்கிவிடுவார்கள். 

அதிகார மையத்துக்கும்  இராணுவத்துக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்ற இந்த நேரத்தில், சிவில் பணிகளை ஆயுதப் படையிடம் ஒப்படைத்திருக்கும் இந்த முடிவு  ஓய்வு பெற்ற இராணுவப் படையினருக்கு மகிழ்ச்சி தரவில்லை.
 
ஆயுதப் படையினர் எப்பொழுதும் தங்கள் கடமையை ஒரு ஒழுக்கமான நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த  நாற்பது ஆண்டுகளுக்கு  மேலாக  அவர்கள், ‘ஒரு தரவரிசை ஒரு ஓய்வூதியம்’ என்ற கோரிக்கையை எழுப்பி வரும்  நிலையில், அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை என்றாலும் அமைதியாக இருந்தனர்.
 
புதிதாக பதவியேற்றுள்ள பாதுகாப்புத் துறை  அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்த வகையான திட்டங்களில் இராணுவம் ஈடுபடுத்தப்படுவது, சில அரசியல் இலக்குகளைத் தவிர்த்து, சிவில் நிர்வாகத்தின் தோல்வியை  சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 
அதே நேரத்தில் ரயில்வே அமைச்சர் தனது உற்சாகத்தையும் சக்தியையும் ரயில்வே நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தவும், அந்தத் துறையை மீண்டும் கட்டி எழுப்பவும், எதிர்கால திட்டங்களை உருவாக்கவும், பயணிகளுக்காக பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தவும் ரயில்வே துறையை மாற்றி அமைக்க வேண்டும்.

(பிரபல தொழிலதிபரும் தேசிய ஜனநாயக் கூட்டணியின் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. ராஜீவ் சந்திரசேகர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்)

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!