மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம் வெளியீடு! மோடி 3.0 ஆட்சியில் யாருக்கு முக்கியத்துவம்?

By SG Balan  |  First Published Jun 10, 2024, 7:46 PM IST

புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. அதில், முக்கியமான நான்கு இலாகாக்களில் எந்த மாற்றமும் இல்லை.


புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய நான்கு முக்கியமான இலாகாக்களில் எந்த மாற்றமும் இல்லை.

நரேந்திர மோடி புதிய கூட்டணி ஆட்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 71 அமைச்சர்களுடன் பதவியேற்றார். பதவியேற்கும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர், 30 கேபினட் அமைச்சர்கள், 5 மாநில அமைச்சர்கள் சுயேச்சை பொறுப்பு, மற்றும் 36 இணை அமைச்சர்கள் பதிவியேற்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், புதிய அமைச்சரவையில் அமித் ஷா உள்துறை அமைச்சகத்தையும், ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தையும் தக்கவைத்துள்ளனர். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ். ஜெய்சங்கரும் தொடர்வார்கள். எனவே முக்கியமான நான்கு துறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலன் ஆகிய இலாகாக்களும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத இலாகாக்களும் பிரதமர் உள்ளன.

ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி! முதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

மூத்த அமைச்சர் நிதின் கட்கரி தான் வகித்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையைத் தக்கவைத்துக்கொண்டார். அஜய் தம்தா மற்றும் ஹர்ஷ் மல்ஹோத்ரா இருவரும் அவரது இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு ஜல் சக்தி துறைக்குப் பதிலாக சுற்றுலாத்துறை வழங்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு, புதிய அமைச்சரவையில் தொலைத்தொடர்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளில் ஜே.டி.எஸ். கட்சியின் ஹெச்.டி. குமாரசாமிக்கு தொழில்துறை, தர்மேந்திரப் பிரதானுக்கு கல்வித்துறை, சிவராஜ் சிங் சௌகானுக்கு விவசாயத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹர்தீப் சிங் பூரிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, கிஷன் ரெட்டிக்கு நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, சிராக் பாஸ்வானுக்கு உணவுத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. மன்சுக் மான்டவியாவுக்கு தொழிலாளர் நலத்துறையும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையும் கிடைத்துள்ளன.

மத்திய அமைச்சரவையின் முழுமையான விவரம்:

யார் இந்த அசோக் எல்லுசாமி? எலான் மஸ்க் எக்கச்செக்கமா பாராட்ட காரணம் என்ன?

click me!